ராகுல்: புல்வாமா தாக்குதல் பற்றி உங்கள் கருத்து என்ன? புல்வாமா தாக்குதலுக்கு யார் காரணம்?
மாலிக்: இந்தத் தாக்குதலை பாஜக நடத்தியது என்று நான் கூறவில்லை. ஆனால் இந்தத் தாக்குதலை அந்தக் கட்சி அரசியல் ரீதியாகப் பயன்படுத்தியது. மக்கள் வாக்களிக்கச் செல்லும்போது புல்வாமாவின் தியாகத்தை நினைவுகூர வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்கள் அழைத்து செல்ல உள்துறை அமைச்சகத்திடம் 5 விமானங்கள் கேட்டனர். ஆனால் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. பின்னர் அவர்கள் சாலை வழியாக செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த சாலை பாதுகாப்பு அற்றது எனத் தெரிந்தும், பயணப்பட்டதால் மனித வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி வீரமரணம் அடைந்தனர்.
இந்தத் தாக்குதல் நடந்த அன்று, பிரதமர் மோடி தேசிய கார்பெட் பூங்காவில் சூட்டிங் நடத்தினார். நான் பலமுறை அவர்களை அழைத்தேன். ஆனால் மோடி தொடர்பு கொள்ளவில்லை. சிறிது நேரம் கழித்து, அவர் அழைத்தபோது, நம் வீரர்கள் பலர் வீரமரணம் அடைந்துவிட்டனர். இவை அனைத்தும் நமது தவறால் நடந்தது என்று அவரிடம் சொன்னேன், பின்னர் அவர் உடனடியாக என்னை அமைதியாக இருக்கச் சொன்னார். இதைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டாம் எனக் கூறினார்.
மேலும் படிக்க | ’ஓபிசி, தலித் பழங்குடியினருக்கு பிரதிநிதித்துவம் இல்லை’ ராகுல் காந்தி அட்டாக்
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என நினைத்தேன். ஆனால் இன்று வரை எதுவும் நடக்கவில்லை. மாறாக புல்வாமா தாக்குதல் சம்பவம் தேர்தல் நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டது.
புல்வாமா தாக்குதல் பயன்படுத்தப்பட்ட அனைத்து வெடிபொருட்களும் பாகிஸ்தானில் இருந்து வந்தவை. வெடிபொருள் நிரப்பட்ட ஒரு வாகனம் பத்து நாட்களாக சுற்றித் திரிந்தாலும், அதில் உளவுத்துறை அமைப்பு கவனம் செலுத்தவில்லை. மேலும் அந்த வாகனத்தின் உரிமையாளர் மற்றும் ஓட்டுனர் பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர் உடையவர்கள். அவர்கள் பல முறை கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இதுமட்டுமின்றி ராணுவ வீரர்கள் செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படவில்லை. ராணுவ வாகனமும் மற்ற வாகனங்களுடன் சேர்ந்து சென்றது. ஆனால் ராணுவ வீரர்கள் வாகனம் செல்லும் போது போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற விதியும் இல்லை என்றார்
புல்வாமா தாக்குதல் குறித்து ராகுல் காந்தி கூறியது
இதனையடுத்து புல்வாமா தாக்குதல் குறித்து ராகுல் கூறும் போது, சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அறிந்ததும், நான் உடனடியாக விமான நிலையத்தை அடைந்தேன். ஆனால் அங்கு என்னை வெளியே செல்ல அனுமதிக்காமல் ஒரு அறையில் அடைத்து வைத்தனர். நான் போராடி அங்கிருந்து வெளியேறினேன். இதையெல்லாம் பார்க்கும் போது ஏதோ ஒரு நிகழ்ச்சி நடப்பது போலவோ அல்லது ஒரு நிகழ்வு உருவாக்கப்படுவது போலவோ உணர்ந்தேன் என்றார்.
ராகுல்: புல்வாமா மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான பிரச்சனையை நீங்கள் எழுப்பியபோது, உங்களுக்கு மிரட்டல் வந்தது. இதில் உங்கள் கருத்து என்ன?
மாலிக்: புகார் கொடுத்தவரை தண்டிக்க முடியாது என்பது சட்டம். நான் புகார் அளித்தபோது, அவர்களிடம் விசாரணை நடத்தப்படவில்லை, எந்த விசாரணையும் செய்யவில்லை. மூன்று முறை வந்து என்னிடம் விசாரணை நடத்தினார்கள். நான் சொன்னேன்- நீங்கள் என்ன செய்தாலும், என்னை ஒன்றும் செய்ய முடியாது. நான் ஒரு பிச்சைக்காரன், என்னிடம் எதுவும் இல்லை என்றேன். இதைக்கேட்ட அதிகாரிகள் சோர்ந்து போய், ஐயா நாங்கள் எங்கள் கடமையை செய்கிறோம் என்றார்கள். அவர்களுக்கும் மேலிடம் என்ன சொல்கிறதோ, அந்த பணி செய்ய வேண்டிய கட்டாயம் உண்டு என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ