ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பக்தர்கள் பலியாயினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
யாத்ரீகர்கள் சென்ற பஸ்சை ஓட்டி சென்ற டிரைவரால் 50க்கும் மேற்பட்டவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டது.
நேற்று இரவு குஜராத் பதிவெண் கொண்ட பஸ் அமர்நாத் செல்லும் யாத்ரீகர்களை அழைத்து கொண்டு ஸ்ரீநகரிலிருந்து ஜம்மு சென்றது. பஸ் கிளம்பி சிறிது நேரம் சென்ற பின்னர், கனபால் என்ற இடத்தில் திடீரென பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இரவு நேரத்தில் நடந்த தாக்குதல் நடந்ததால், தாக்குதல் நடத்தியவர்கள் யார் என தெரியவில்லை. இருப்பினும் பஸ்சை ஓட்டி வந்த சலீம் ஷேக் அச்சம் கொள்ளாமல் பஸ்சை, சம்பவ இடத்திலிருந்து தள்ளி கொண்டு சென்று நிறுத்தினார். இதனால், பயங்கரவாதிகள் தாக்குதலில் இருந்து 50க்கும் மேற்பட்டவர்களை காப்பாற்றப்பட்டது.
இந்த துணிச்சலான காரியத்தை செய்த டிரைவரை பாராட்டி குஜராத் முதல்வர் ரூபானி கூறியது-
பலரின் உயிரை காப்பாற்றிய டிரைவருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். வீர தீர செயலுக்கான விருது அவருக்கு கிடைக்க பரிந்துரை செய்யப்படும் எனக்கூறினார்.