பெண்குழந்தை பெற்றதால் மனைவிக்கு முத்தலாக் கூறிய கணவர் மீது வழக்கு பதிவு!
முத்தலாக் தடை சட்டம் கடந்த 1 ஆம் தேதி அமுலுக்கு வந்தது. இந்த சட்டத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒரு பக்கம் இருந்தாலும் இஸ்லாமிய பெண்கள் முத்தலாக் மசோதாவிற்கு முழு ஆதரவையும் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், 23 வயதாகும் பர்சானா பீகார் மாநிலம் சுபால் மாவட்டம் மகேஷ்புர் கிராமத்தை சேர்ந்தவர். இவரது கணவர் இக்ராமுல் (28). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது. பிறந்த சில நாட்களிலேயே அந்த குழந்தை இறந்து விட்டது.
இக்ராமுல் பெண் குழந்தையை விரும்பவில்லை. இந்த நிலையில் மீண்டும் பர்சானா கர்ப்பம் அடைந்தார். இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு அழகான இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். பெண் குழந்தைகள் பிறந்ததால் கணவர் என்ன செய்யப் போகிறாரோ என்ற பயத்திலேயே பர்சானா பயந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு வெளிநாட்டி உள்ள அவரது கணவர் இக்ராமுல் தொலைபேசியில் உரையாடியுள்ளார். அப்போது, ‘பெண் குழந்தைகளை பெற்ற நீயும் வேண்டாம். குழந்தைகளும் வேண்டாம். உன்னை தலாக் செய்யப்போகிறேன் என்று கத்தி இருக்கிறார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பர்சானா கணவரிடம் அழுது கெஞ்சி இருக்கிறார். ஆனாலும் அவர் மனம் இறங்கவில்லை. போனிலேயே ‘தலாக்... தலாக்... தலாக்...! என்று மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்து விட்டதாக அறிவித்து இருக்கிறார்.
அதோடு நிற்கவில்லை உடனடியாக வீட்டில் இருந்த அவரது நாத்தனார்கள் தலாக் செய்து விட்டதால் இனி உங்கள் அறையில் இருக்க கூடாது என்று வெளியேற்றி இருக்கிறார்கள். பொழுது விடிந்ததும் பிறந்து 10 நாட்களே ஆன இரட்டை குழந்தைகளுடன் பர்சானா அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். அவரது நிலமையை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். இதையடுத்து பர்சானா சாதர் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்துள்ளார். போலீசார் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் இக்ராமுல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முத்தலாக் தடை சட்டம் அமுலுக்கு வந்த பிறகு பீகார் மாநிலத்தில் பதிவான முதல் வழக்க இது. இதேபோல் உத்தரபிர தேசம் மாநிலம் பதேபூர் மாவட்டம் ஜிக்னி கிராமத்தை சேர்ந்தவர் சம்சுதீன். இவரது மனைவி பிதாகதுன். பாராளுமன்றத்தில் முத்தலாக் தடை சட்டம் நிறை வேறியதை அறிந்ததும் முபிதா மகிழ்ச்சி அடைந்துள்ளார். சக பெண் தோழிகளுடன் சேர்ந்து மகிழ்ச்சியை கொண்டாடி இருக்கிறார்கள்.
இதை அறிந்து சம்சுதீன் ஆத்திரம் அடைந்து இருக்கிறார். உடனடியாக மூன்று முறை தலாக் சொல்லி விவகாரத்து செய்து முபிதாவை வீட்டை விட்டு வெளியேற்றி இருக்கிறார். இதுபற்றி பிந்கி போலீசில் முபிதா புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.