அயோத்தி வழக்கில் முஸ்லீம்கள் சார்பாக வாதாடி வந்த மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளார்..!
டெல்லி: அயோத்தி வழக்கில் சன்னி வக்போர்டு மற்றும் முஸ்லிம் தரப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவான் நீக்கப்பட்டுள்ளார். நூற்றாண்டு காலமாக நீடித்த அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நிலவழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த வாரம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது. அது மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கு அயோத்தி நகருக்குள் உரிய சரியான இடத்தில் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் செய்வது என முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு ஜமாத்-எ- உலமா இந்த் ஆதரவு மற்றும் மனுதாரர்கள் சிலரும் முடிவெடுத்துள்ளனர். எனினும் உத்தரபிரதேச மத்திய சன்னி வக்போர்டு, ஷியா வக்போர்டு ஆகியவை மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய விருப்பமில்லை என தெரிவித்து விட்டன.
அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி ஜமாயத் உலமா அமைப்பு சார்பில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அயோத்தி வழக்கில் சன்னி வக்போர்டு மற்றும் முஸ்லிம் தரப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவான் நீக்கப்பட்டுள்ளார். ராஜீவ் தவானுக்கு பதிலாக வேறு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அயோத்தி வழக்கில் முஸ்லீம்கள் சார்பாக வாதாடி வந்த மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய இடத்திற்கு உரிமை கோரிய சன்னி வஃக்பு வாரியம் மற்றும் சில இஸ்லாமிய அமைப்புகளுக்காக உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வந்தவர் ராஜீவ் தவான்.
இந்து மதத்தை சேர்ந்த இவர் பாபர் மசூதி இடம் முஸ்லீம்களுக்கே சொந்தம் என வாதாடி வந்த நிலையில் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து செயல்பட்ட ராஜீவ் தவான் தற்போது நீக்கப்பட்டுள்ளார். உடல் நிலையை காரணம் காட்டி இனி அயோத்தி வழக்கில் ஆஜராக வேண்டாம் என்று சன்னி வஃக்பு வாரிய தரப்பு தம்மை கேட்டுக் கொண்டுள்ளதாக ராஜீவ் தவான் கூறியுள்ளார்.