புதுடெல்லி: பட்ஜெட் (Budget 2019) அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இரண்டாவது நாளாக பங்கு சந்தை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. சென்செக்ஸ் மதியம் 1.30 மணிக்கு 700 புள்ளிகள் சரிந்து 38,835.39 ஆக குறைத்து. அதேபோல நிஃப்டியும் 223 புள்ளிகள் சரிந்து 11588 ஆக குறைந்தது. காலை 9.55 மணிக்கு 416.60 புள்ளிகள் சரிந்து சென்செக்ஸ் 39,096.79 ஆகவும், நிஃப்டி 116.65 புள்ளிகள் சரிந்து 11,694.50 ஆக இருந்தது. காலை 11.45 மணிக்கு சென்செக்ஸ் 581.21 புள்ளிகள் குறைந்து 38,932.18 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது.
கடந்த வாரம் அமெரிக்காவில் வேலை வீழ்ச்சி அடைந்தன் காரணமாக, அமெரிக்காவின் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் வட்டி விகிதங்களைக் குறைத்தது. அதன் காரணமாக ஆசிய சந்தைகளில் எதிர்மறையான போக்கை ஏற்பட்டுள்ளது. இது தவிர, கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2019-20 பொது பட்ஜெட்டில், தற்போதைய வரம்பை 25 சதவீதத்திலிருந்து தத்திலிருந்து 35 சதவீதமாக உயர்த்துவது குறித்து பரிசீலிக்குமாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் கூறினார். இதனால் முதலீட்டாளர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது, இதன் காரணமாகவும் பங்குச் சந்தை வீழ்ச்சி கண்டுள்ளது.
திவாலான பூய்சன் ஸ்டீல் ரூ.3800 கோடி மோசடி செய்திக்குப் பிறகு, பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்கு 10 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஜெட் ஏர்வேஸின் பங்கும் 5 சதவீதம் சரிவை எதிர்கொண்டுள்ளது. ஓ.என்.ஜி.சி. பஜாஜ் நிதி, இந்தியன் ஆயில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, லார்சன் & டூப்ரோ, கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ், எண்டிபிசி, டாடா மோட்டார்ஸ், பாரத் பெட் ரோலியம், மாருதி சுசுகி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஐஷர் மோட்டார்ஸ் ஆகியவை 2.77 சதவீதம் முதல் 4.64 சதவீதம் வரை சரிந்தன. வங்கி, மீடியா மற்றும் தனியார் துறை பங்குகள் தலா 2 முதல் 3 சதவீதம் வரை சரிந்தன.