பாண்டிபோரா: காஷ்மீரில் பாஜக (BJP) தலைவர், அவரது தந்தை மற்றும் சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு காரணமான அவரது 8 பாதுகாப்புக் காவலர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
காஷ்மீரின் பாண்டிபோரா (Bandipora) மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) மாலை பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சில நபர்களால் உள்ளூர் பாஜக தலைவர் (BJP Leader) ஷேக் வசீம் பாரி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஷேக் வசீம் பாரி ஸ்ரீநகருக்கு வடக்கே 60 கி.மீ தொலைவில் உள்ள பாண்டிபோரா மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் (Bharatiya Janata Party) முன்னாள் தலைவராக இருந்தார்.
பாண்டிபூரில் உள்ள அவரது கடையில் நடந்த தாக்குதலில் ஷேக் வசீம் பாரியின் தந்தை பஷீர் அகமது மற்றும் சகோதரர் உமர் ஆகியோரும் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து பாஜக தலைவருக்கு நியமிக்கப்பட்ட எட்டு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பயங்கரவாதிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த செய்தியும் படிக்கவும் | காஷ்மீரில் வன்முறை ஒருபோதும் வெல்லாது: ராகுல் காந்தி ஓபன் டாக்