பீகார் சென்றுள்ள தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், பாட்னாவில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரையும், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவையும் நேரில் சந்தித்துப் பேசினார். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனப் படைகளுடனான மோதலில் கொல்லப்பட்ட வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு, ஏற்கனவே அறிவித்த ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகளையும் சந்திரசேகர ராவ் வழங்கவுள்ளார்.
மத்திய பாஜக அரசை தொடர்ந்து விமர்சித்து வருபவரான சந்திரசேகர ராவ், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கவும் முயற்சித்து வருகிறார். பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த நிதிஷ்குமார், இந்த மாத தொடக்கத்தில், அக்கூட்டணியில் இருந்து விலகி ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைத்தார். இரு தலைவர்களுமே பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயலும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேலும் படிக்க | அதிகார போதையில் இருக்கிறீர்கள் : கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே எழுதிய கடிதம்
CM Sri KCR along with Bihar CM Sri @NitishKumar today distributed cheques of ₹10 lakhs each to the families of soldiers who sacrificed their lives in the Galwan Valley and of ₹5 lakhs to each family of the migrant workers who died in a mishap in a scrap godown. pic.twitter.com/BBM37ZLnIg
— Telangana CMO (@TelanganaCMO) August 31, 2022
இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி, தங்களது மாநிலங்களில் செல்வாக்கை இழந்த நிலையில், "நாட்டின் பிரதமராக ஆசைப்படும்" இரண்டு தலைவர்களின் சந்திப்பு என கூறினார். இவர் நிதிஷ் குமார் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்திருந்தபோது, துணை முதலமைச்சராகப் பதவி வகித்தவர்.
"பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னால் நிற்க முடியாத இரண்டு பகல் கனவு காண்பவர்களின் சந்திப்பு இது" எனவும், "எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் கூறும் சமீபத்திய நகைச்சுவை இது" எனவும் சுஷில் மோடி கூறியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ