கர்நாடக முதல்வர் HD குமாரசாமிக்கு அளித்து வந்த ஆதரவினை திரும்ப பெருவதாக இரு சுயேட்சை MLA-க்கள் தெரிவித்துள்ளனர்!
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் - ஜனதா தளம் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவினை திரும்ப பெருவதாக சுயேட்சை MLA-க்கள் நகேஷ் மற்றும் R ஷங்கர் தெரிவித்துள்ளனர். இதன் பன்னணியில் பாஜக கட்சியினர் இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக அம்மாநில ஆளுநருக்கு இருவரும் கடிதம் எழுதியுள்ளனர். கடிதத்தில் உடனடியாக தங்களது ஆதரவினை திரும்ப பெருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
2 Independent MLAs, H Nagesh and R Shankar, withdraw their support from Karnataka govt. pic.twitter.com/C34u3BNFOb
— ANI (@ANI) January 15, 2019
இந்த அறிவிப்பினை அடுத்து MLAஷங்கர் தெரிவிக்கையில்,... இன்று மகர சங்கராந்தி, மாற்றத்திற்கான நாள். கர்நாடக அரசிலும் மாற்றம் வரவேண்டும் என இந்த முடிவை எடுத்துள்ளேன். விரைவில் மாற்றம் வரும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் மும்பை நட்சத்திர விடுதியில் கர்நாடக மாநில காங்கிரஸ் MLA-க்கள், சுயேட்சை MLA-க்கள் வருகையால் பிஸியாகியுள்ளது. விடுதியை சுற்றிலும் காவல்துறை அதிகாரிகளால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மும்பை காவல்துறையினருடன் கர்நாடக காவல்துறையின் உயர் அதிகாரிகளும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
222 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வெற்றிப்பெற்றன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் - ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து பாஜக-விற்கு எதிராக ஆட்சி அமைத்தனர். இக்கூட்டணிக்கு ஆதரவாக சுயேட்சை MLA-க்கள் ஆதரவு அளித்தனர். இந்நிலையில் தற்போது இக்கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவினை திரும்பப்பெருவதாக இரு சுயேட்சை MLA-க்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விரு MLA-க்களில் விலகல் ஆட்சியல் எவ்வித மாற்றத்தை ஏற்படுத்தாது என்றபோதிலும், இவர்களது விலகல் மற்றவர்களின் விலகலுக்கு ஆரம்ப புள்ளியாய் அமையலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.