புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இன்று காலை நாடாளுமன்றத்தில் அருண் ஜேட்லி 2017-18-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
-இந்த வருடத்திற்கான மொத்த பட்ஜெட் செலவு ரூ.21.47 லட்சம் கோடியாக இருக்கும்.
-உச்சவரம்பில் மாற்றம் இல்லை வருமானவரி 5 சதவீதம் குறைப்பு மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
-ஆண்டு வருவாய் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலுள்ளவர்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரி
-ரூ.5 லட்சம் வரை வருவாய் மீது 5% வரி
-ரூ. 3 லட்சம் வரையிலான மாத வருமானத்துக்கு வருமான வரி விலக்கு
-தனி நபர் வருமான வரி கணக்கு தாக்கல் படிவம் இனி ஒரே பக்கமாக இருக்கும்
-ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை மாத ஊதியம் பெருவோருக்கான வருமான வரி 10% முதல் 5% ஆக குறைப்பு
-அரசியல் கட்சிகளின் வெளிப்படைத்தன்மையை பாதுகாக்க ஜேட்லி அதிரடி அறிவிப்பு
-அரசியல் கட்சிகள் அதிகபட்சமாக ஒரு மூலத்திடமிருந்து ரூ.2000 மட்டுமே நன்கொடை பெற முடியும்
-அரசியல் கட்சிகள் நன்கொடையை டிஜிட்டல் முறை அல்லது காசோலையில்தான் பெற வேண்டும்.
-ரிசர்வ் வங்கி சட்டத்தில் மாற்றம் செய்யப்படும்
-அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தால்தான் அரசியல் கட்சிகளுக்கு வருமான வரியில் விலக்கு
-வங்கியில் ரூ 3 லட்சம் மேல் பண பரிவர்த்தனை அனுமதி இல்லை
-2015-16-ம் ஆண்டில் மொத்த வரி வருவாய் 17 சதவீதம் அதிகரித்துள்ளது
-ரூ. 50 கோடி வரை ஆண்டு வருவாய் உள்ள நிறுவனங்களுகக்கான வருமான வரி 30% இருந்து 25% ஆக குறைக்கப்படும்
-ஆண்டுக்கு 50 கோடிக்கு குறைவாக வர்த்தகம் நடைபெறும் சிறு நிறுவனங்களுக்கு 5 சதவீத வரி குறைப்பு
-நாட்டில் 6.94 லட்சம் நிறுவனங்கள் வருமான வரி செலுத்துகின்றன
-கடந்த ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் 3.7 கோடி பேர் மட்டுமே, இதில் ஆண்டு வருமானத்தை ரூ. 10 லட்சத்துக்கு அதிகமாக காட்டியவர்கள் 24 லட்சம் பேர் தான்
-பண மதிப்பிழப்பால் அட்வான்ஸ் வருமான வரி கட்டுவது 34.8% அதிகரித்துள்ளது -இந்தியாவில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது
-3.7 கோடி தனி நபர்களில் வருமான வரி தாக்கல் செய்தோர் 99 லட்சம் பேர் குறைந்த வருவாய் பிரிவினர்
-52 லட்சம் பேர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டுகிறார்கள்
-1.72 லட்சம் பேர் மட்டுமே 50 லட்சத்துக்கு மேல் வருவாய் பெறுவதாக அறிவித்துள்ளனர்
-பணமதிப்பிழப்புக்கு பிறகு இந்த வரி ஏய்ப்பு அம்பலமானது
-1.09 கோடி வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்கள் சராசரி மதிப்பு 5.3 லட்சம்
-8 லட்சத்துக்கு மேல் 1.48 லட்சம் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது
-2017-18ல் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 3.2 சதவீதமாக இருக்கும்
-கடந்த ஆண்டில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிததி ரூ. 4.11 லட்சம் கோடி
-வங்கிகளில் சட்டவிரோத டெபாசிட்களை தடுக்க சட்டம் இயற்றப்படும்
-பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 2.74 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்
-2017-18ம் ஆண்டு பட்ஜெட்டில் மொத்த செலவீனங்கள் ரூ. 21.47 லட்சம் கோடியாக இருக்கும்
-மொத்த உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 3.2 சதவீதமாக இருக்கும்-ஜேட்லி
-மத்திய எண்ணெய் நிறுவனங்களை ஒருங்கிணைத்து மாபெரும் பொதுத்துறை நிறுவனத்தை உருவாக்க திட்டம்
-பல்கலைக்கழக மானிய குழுவில் மாற்றம் கொண்டுவரப்படும்
-மருத்துவ சேவையை பரவலாக்க,கூடுதல் மருத்துவமனைகள் அமைக்கப்படும்
-ஆதார் அட்டை அடிப்படையில் மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
-வறட்சியை சமாளிக்க புதிதாக 5 லட்சம் குளங்கள் வெட்டப்படும்
-செக் மோசடிகளை தவிர்க்க மாற்றுமுறை ஆவணச் சட்டத்தில் திருத்தம்
-உர விற்பனை நிலையங்கள், கல்வி நிறுவனங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை
-ஆதார் அடிப்படையிலான பண பரிவர்த்தனை திட்டம் அறிமுகம்
-மொபைல் வாலட், டெபிட் கார்டுகள் இல்லாதவர்களுக்காக இத்திட்டம்
-இந்த நிதியாண்டில் 2500 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு இலக்கு
-குஜராத் மற்றும் ஜார்க்கண்டில் புதிதாக 2 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும்
-தேசிய நெடுஞ்சாலைகள் திட்டத்துக்கு ரூ. 64,000 கோடி ஒதுக்கீடு
-புதிய அன்னிய முதலீட்டுக் கொள்கை கொண்டு வரப்படும்
-போக்குவரத்து துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.2,41,387 கோடி
-நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ. 3,96,135 கோடி செலவிடப்படும்
-உள்கட்டமைப்பு துறைக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.3,96,135 கோடி
-100 திறன் மேம்பாட்டு மையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்படும்
-மூத்த குடிமக்களுக்கு 8% வருவாயுடன் எல்.ஐ.சி திட்டம்
-மருத்துவ மேற்படிப்புகளில் 5000 சீட்கள் அதிகரிக்கப்படும்
-கிராம பஞ்சாயத்துகளுக்கு பிராண்ட் பேண்ட் இண்டர்நெட் வசதிகள் செய்து தரப்படும்
-அதிவிரைவு பிராட்பேண்ட் இணைப்புக்காக 10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்
-1,50,000 கிராமங்களுக்கு அடுத்த ஆண்டுக்குள் பிராட்பேண்ட் வசதி கிடைக்கும்
-அரசின் பீம் குறுஞ்செயலியை 1.25 கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்
-எலக்ட்ரானிக் பொருள் உற்பத்தி மையமாக இந்தியா மாற்றப்படும்
-எலக்ட்ரானிக் துறைக்கு ரூ.745 கோடி ஒதுக்கீடு
-நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ. 3,96,135 கோடி செலவிடப்படும்
-அன்னிய முதலீடுகள் 36% அதிகரித்துள்ளது. 361 பில்லியன் டாலர்கள் கையிருப்பு
-ரயில்வே பாதுகாப்பு திட்டங்களுக்காக 5 வருடங்களுக்கு 1 லட்சம் கோடி ஒதுக்கப்படும்
-நடப்பு நிதியாண்டில் 3500 கி.மீ தூரத்திற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும்
-ரயில்வே பாதுகாப்பு, வளர்ச்சி, தூய்மை, சீர்திருத்தத்திற்கு முன்னுரிமை
-500 ரயில் நிலையங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் மாற்றப்படும்
-7000 ரயில் நிலையங்களில் சோலார் மின்சார வசதி செய்யப்படும்
-2019க்குள் அனைத்து ரயில்கள் கழிவறைகளும் பயோ டாய்லெட்டாக மாற்றப்படும்
-மருத்துவ படிப்பில் மேலும் 25000 முதுநிலை படிப்பு
-1.5 லட்சம் சுகாதார மையங்கள் மேம்படுத்தப்படும்
-மூத்த குடிமக்கள் ஆரோக்கிய மேம்பாட்டுக்காக ஆதார் அட்டை அடிப்படையில் ஸ்மார்ட்கார்டு
-முதல்கட்டமாக இந்த திட்டம் 15 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்படும்
-தாழ்த்தப்பட்டோருக்கான நிதி ஒதுக்கீடு ரூ.52393 கோடியாக உயர்வு
-மருத்துவ உபகரணங்கள் துறையில் முதலீடு ஈர்க்கப்படும்
-மருத்துவ உபகரண விலை குறைக்க நடவடிக்கை
-தொழிலாளர் நலனை காக்க அரசு நடவடிக்கை எடுக்கும்
-குஜராத் ஜார்கண்டில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை மையங்கள்
-கிராமப்புற பெண்கள் மேம்பாட்டுக்கு ரூ.500 கோடி சிறப்பு நிதி
-பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி
-2017-18-ல் பிரதான் மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் ரூ 19,000 கோடி.
-உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்த தனி அமைப்பு.
-கிராமப்புற வேலை உத்திரவாதத் பெண்களின் -பங்கேற்பு 55 சதவீதமாக உயர்ந்துள்ளது.
-சிபிஎஸ்இ நுழைவுத் தேர்வுகளை நடத்தாது.
-நாட்டில் 2019-ம் ஆண்டுக்குள் 50,000 கிராம பஞ்சாயத்துகளில் ஏழ்மை முழுதாக நீக்கப்படும்.
-2018 மே 1-ம் தேதிக்குள் அனைத்து கிராமங்களிலும் மின்வசதி.
-கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ.187223 கோடி ஒதுக்கீடு.
-கடந்த பட்ஜெட்டை ஒப்பிட்டால், இது 24 சதவீத உயர்வு.
-1 கோடி குடும்பங்களை வறுமையிலிருந்து நீக்க இலக்கு.
-2018 மே 1-ம் தேதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி வழங்கப்படும்.
-கிராமப்புறங்களில் நாள்தோறும் 133 கி.மீ சாலை அமைக்க இலக்கு.
-ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு சாதனை அளவாக ரூ.48000 கோடி ஒதுக்கீடு.
-விவசாயிகளுக்கு 60 நாள் வட்டி தள்ளுபடி.
-பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகள் அதிக அளவு கடன் வழங்க முடியும்.
-விவசாய உற்பத்தி வளர்ச்சி இவ்வாண்டில் 4.1 சதவீதமாக இருக்கும்.
-2017-18ல் விவசாயிகளுக்கு இதுவரை இல்லாத சாதனையாக 10 லட்சம் கோடி கடன் வழங்க முடிவு.
-அமெரிக்காவின் நிதிக்கொள்கையால் வளரும் நாடுகள் பாதிக்கப்பட வாய்ப்பு.
-விவசாயிகள் வருமானம் இரட்டை மடங்காக்கப்படும்.
-கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
-இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.
-ஏழைகளுக்கு வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படும்.
-டிஜிட்டல் பொருளாதாரம் வளர்க்கப்படும்.
-வரி வசூல் நேர்மையானதாக இருக்கும்.
-வங்கிகளின் கடன் வட்டி விகிதத்தை குறைக்கப்படும்.
-சிபிஐ பணவீக்கம் டிசம்பர் 2016-ல் 4.3 சதவீதம் ஜூலை 2016 இல் 6 சதவீதம் குறைந்து
-உலகின் 6 வது பெரிய உற்பத்தி நாடாக இந்தியா மாறிவிட்டது.
-அன்னிய நேரடி முதலீடு 36 சதவீதம் அதிகரிப்பு.
-இந்தியா பொருளாதாரமாகும் 2017-ல் வேகமாக வளரும்.
-உலக பொருளாதாரத்தின் இன்ஜினாக உள்ளது இந்தியா.
-இந்திய 2017-ல் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாத்தில் ஒன்றாக இருக்கம்.
-ஊரக வளர்ச்சிக்கு அதிக நிதி செலவிடப்படும் -வறுமை நீக்கம், அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும்
-வேலை வாய்ப்பை உருவாக்குவதே மத்திய அரசின் முக்கிய நோக்கம்
-பண மதிப்பிழப்பு நடவடிக்கை பலன் படிப்படியாக கிடைக்கும்-ஜேட்லி
-பண வீக்கம் 3.4 என்ற அளவில் குறைந்துள்ளது-ஜேட்லி
-பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது
-வளர்ந்த நாடுகளின் வளர்ச்சி இந்த ஆண்டு 1.6%-1.9% ஆக இருக்கும் -வளரும் நாடுகளின் வளர்ச்சி 4.1%-4.5% ஆக இருக்கும்
-உலக அளவில் நாடுகளின் சராசரி வளர்ச்சி 3.4% ஆக இருக்கும்
-ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு ஆதரவு அளித்த கட்சிகளுக்கு நன்றி
-பண மதிப்பிழப்பு என்பது தைரியமான முடிவு
-உலக வர்த்தக வர்த்தகத்தின் என்ஜினாக இந்தியா விளங்குகிறது
-அடுத்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதாக வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும்
-கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரம்
-வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், இளைஞர்களுக்கு அதிக பலன்கள் போய் சேர செய்வதும் மத்திய அரசின் திட்டம்
Lok Sabha Speaker Sumitra Mahajan pays obituary to #EAhamed pic.twitter.com/uKBRnxDEQq
— ANI (@ANI_news) February 1, 2017
பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகிறார் அருண் ஜெட்லி
பார்லிமெண்டில் எம்.பி. இ. அகமது மறைவிற்கு இரங்கல்.
கேபினட் அமைச்சரவைக் கூட்டம் முடிவடைந்தது. பட்ஜெட் 2017 கேபினட் அமைச்சரவை ஒப்புதல்.
எம்.பி அகமதுவின் மறைவு வருத்தத்தை அளிக்கிறது -மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்.
பட்ஜெட் தாக்கல் செய்வது அரசியலமைப்பு கடமை -மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்.
இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் -மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தகவல்.
காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல்.
Watch me live presenting the Union Budget 2017 at 11 am, February 1, 2017 https://t.co/BtQAlBf8Zz
— Arun Jaitley (@arunjaitley) February 1, 2017
இது 31 மார்ச் இல்லை, பட்ஜெட் தாக்கல் செய்ய நிறைய நேரம் இருக்கிறது. அரசு அதை தள்ளிப்போட முடியும்: கார்கே
ஜெடியு தலைவர்கள் மற்றும் முன்னாள் பிரதமர் தேவே கவுடா உட்பட எங்கள் கருத்து, இந்த மத்திய பட்ஜெட் தாக்கல் ஒத்திவைக்கப்பட வேண்டும்- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தை வந்தடைந்தார்.
திட்டமிட்டபடி இன்று பட்ஜெட் தாக்கலாகிறது. இ. அகமது மறைவையொட்டி அரை மணி நேரம் அவை ஒத்தி வைக்கப்படும்.
Budget will be presented,obituary may happen before or after it,Government has spoken to all parties and arrived at consensus:Govt sources
— ANI (@ANI_news) February 1, 2017
பட்ஜெட் 2017 புத்தகங்கள் நாடாளுமன்றம் வந்து சேர்ந்தன.