2018-19-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இவர் தாக்கல் செய்த ஐந்தாவது பட்ஜெட் தாக்கல் இது.
இந்த நிதிநிலை அறிக்கையில், விவசாய கடன் இலக்கு 11 கோடி, ஊரக கட்டமைப்பு மேம்பாடுக்கு 14.34 கோடி, டிஜிட்டல் இந்தியாவிற்கு 3,073, மகளிர் நல மேம்பாடுக்கு 1.21 லட்சம் கோடி, உணவு மானியத்திற்கு 1.69 லட்சம் கோடி, இரயில்வே துறைக்கு 1.48 லட்சம் கோடி என பல்வேறு திட்டங்களை அவர் அறிவித்திருந்தார்.
நிதிநிலை அறிக்கை யாருக்கு சாதகம்:
விவசாயம்: நிதிநிலை அறிக்கையில் அதிக சலுகைகளை விவசாயத்துக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது. நாடுமுழுவதும் வேளாண் சந்தைகளுக்கு அதிகபடியான முதலீடு ஊக்குவிப்பு, விவசாயிகளின் ஆதார அதிகரிப்பு, நீர்பாசன திட்டம், மீன்வளத்துறை மற்றும் வேளாண்வளத்துறைகளுக்கு அதிகபடியான நிதி ஒதுக்கீடு.
மருத்துவ சேவை: நாடு முழுவதும் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு. இதன் மூலம் மருத்துவ சேவை செய்யும் நிறுவனங்களுக்கு அதிக லாபம்.
போக்குவரத்து நிறுவனம்: பெங்களூரு புறநகர் இரயில் சேவைக்கு ரூ.17,000 கோடி. 600 முக்கிய இரயில் நிலையம் மேம்பாட்டு திட்டம். 18,000 கி.மீ தொலைவுக்கு இரட்டை ரயில் பாதை. இந்த திட்டங்களின் மூலம் கட்டுமானம் மற்றும் பொறியியல் நிறுவனங்கள், ரயில் பெட்டி தயாரிப்பு நிறுவனம் போன்றவைக்கு அதிக லாபம்.
நுகர்வோர் பயன்பாட்டுப் பொருள்: அதிகம் விற்பனையாகும் மக்கள் பயன்படுத்தும் பொருட்களை விற்கும் நிறுவனங்களுக்கு அதிக வேலைவாய்ப்பு பெருகுவதோடு அதிக லாபம்த்தையும் ஈட்டும்.
ஆபரண வர்த்தகர்கள்: தங்கத்தின் 60% தேவைகள் கிராம புறங்களில் அதிகம். கிராமப்புறம் மற்றும் விவசாயை ஊக்குவிக்க நிதியமைச்சர் அதிக சலுகைகளை அறிவித்தார். இதன் மூலம் தங்க ஆபரணங்களின் விற்பனை அதிகரிக்கும்.
நிதிநிலை அறிக்கை யாருக்கு பாதகம்:
கடன் பத்திரங்கள்: கடன் பத்திரங்கள் வாங்கும் நபர்களுக்கு எந்த வித சலுகையும் இல்லை. எனவே, கடன் பத்திர முதலீட்டை எதிர்நோக்கி இருக்கும் அரசு மற்றும் தனியார் வங்கிகள் கடுமையாக பாதிக்கும். இதன் மூலம் நீண்டகாலம் பங்கு முதலீடு செய்யும் நபர்களுக்கு எந்த பயனும் இல்லை.
பங்கு முதலீடு: முதலீட்டு வருவாய்க்கு எந்த வித சலுகையும் நிதிநிலை வழங்கவில்லை. இதற்க்கு வரிவிதிப்பு மட்டும் செய்யபட்டுள்ளதால் முதலீட்டு நிறுவனங்கள் பதிபடையும். இதன் மூலம் எல்.ஐ.சி உள்பட நிதி நிறுவனங்கள் பாதிப்படையும். முதலீட்டில் மக்கள் ஆர்வம்காட்டி வரும் நிலையில் அதற்கு வரி விதித்திருப்பது சரிவை மட்டும் சந்திக்கும்.
பாதுகாப்புத்துறை: பாதுகாப்புத்துறைக்கு நிதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது ஆனால் அதற்கும் பலன் இல்லை. பாதுகாப்பிற்கு தேவையான தட்வலங்கள் மேக் இன் இந்தியா என்ற திட்டத்தில் தயாரிக்கப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இராணுவ தடவலங்களை தயாரிக்கும் நிறுவனகளுக்கு சலுகை கிடைக்கும் என்ற எதிர்பார்த்து இருந்தது. ஆனால், அவர்களுக்கு எந்த வித சலுகையும் வழங்கவில்லை.