பெட்ரோல் பங்கில் மொபைல் உபயோகித்தால் இதுதான் விளைவு? வீடியோ

பெட்ரோல் பங்கில் கைப்பேசியை பயன்படுத்ததியதால் தீ பற்றிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Dec 14, 2017, 05:50 PM IST
பெட்ரோல் பங்கில் மொபைல் உபயோகித்தால் இதுதான் விளைவு? வீடியோ title=

தாங்கள் பெட்ரோல் பங்கில் கைப்பேசியை பயன்படுத்துவதில்லை என்று சொன்னால் கவலை இல்லை. பெட்ரோல் பங்கில் மிகவும் அலட்சியமாக ஒருவர் மொபைல் பயன்படுத்தியதால் ஏற்பட்ட விளைவுகளை பாருங்கள். பெட்ரோல் பங்கில் யாரும் கைப்பேசியை பயன்படுத்தகூடாது என்று ஹைதராபாத் போலீஸ் கூறியுள்ளனர். மேலும் தங்கள் ட்விட்டர் கணக்கில் பதிவு செய்த வீடியோவை பாருங்கள்.

 

 

ஹைதராபாத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இரு சக்கர வாகனத்தில் தனது குழந்தையுடன் வருகிறார். பெட்ரோல் பங்கில் இருக்கும் ஊழியரிடம் பெட்ரோல் போடும்படி கூறுகிறார். பின் தனது கைப்பேசியில் யாருடனோ பேசுகிறார். செல்போன் கோபுரத்தின் அலைகள் மின்காந்த கதிர்வீச்சு உட்பட்டு செயல்படுவதால், திடிரென அங்கு தீ பற்றிக்கொண்டது. இதனால் அங்கு பரபரபப்பு ஏற்பட்டது. அந்த பைக்கில் முன்னால் இருக்கும் குழந்தையும் தீ தாக்கியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெட்ரோல் பங்கிற்கு வரும்போது மொபைல் போனை யாரும் பயன்படுத்தகூடாது என்று கடுமையான எச்சரிக்கை இருந்தும், இதுபோன்ற விதி மீறல்களால் அசம்பாவிதம் ஏற்படுகிறது. 

Trending News