Watch Video: வீட்டை தாக்கிய காட்டு யானை, பின் கதவு வழியாக தப்பிய கணவன் மனைவி

Wild Elephant Attack in Kerala: கேரளாவில் இரவில் காட்டுயானை தாக்கியதில் வீடு சேதமடைந்தது. யானை தாக்குதலால் பீதி அடைந்த கணவன் மனைவி பின் கதவு வழியாக தப்பி ஓடினர். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 21, 2022, 04:06 PM IST
  • வீட்டுக்குள் வந்து தாக்கிய காட்டு யானைகள்.
  • பீதியடைந்து பின் கதவு வழியாக தப்பிய கணவன் மனைவி.
  • கேரளாவின் மூணாரில் பரபரப்பு.
Watch Video: வீட்டை தாக்கிய காட்டு யானை, பின் கதவு வழியாக தப்பிய கணவன் மனைவி title=

கேரளா மாநிலம் மூணாறு  நயமங்காடு தேயிலை தோட்டங்களில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. காட்டு யானைகள் தங்கள் இருப்பிடங்களை விட்டு, மக்கள் வாழும் பகுதிகளுக்குள் புகுவதால், மக்கள் பெரும் அச்சத்திலும் பீதியிலும் உள்ளனர். யானைகளின் நடமாட்டம் வாகன ஓட்டிகளுக்கு பெரும் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில், தற்போது மக்களின் குடியிருப்பு பகுதிகளிலும் யானைகள் வருவது தொந்தரவுகளை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் , நேற்று இரவு இரண்டு காட்டு யானைகள் நயமங்காட்டில் உள்ள தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை மகாலட்சுமியின் வீட்டிற்கு வந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. தலைமை ஆசிரியை மகாலட்சுமியின் வீட்டிற்கு வந்த காட்டுயானைகள் முன்னால் இருந்த தகர கேட்டை அடித்து உடைத்துள்ளன. பின்னர் வீட்டு சுவர்களையும் இவை தாக்கியுள்ளன. இதனால் கட்டிடத்துக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | உயர்ந்தது பால் விலை! ஆவின் புதிய விலை உயர்வு பட்டியல் இதோ! 

இந்த இடிபாடுகளின் சத்தம் கேட்டு எழுந்த ஆசிரியை மற்றும் அவரது கணவர் சாலமன் ராஜா ஆகியோர் காட்டு யானைகளை கண்டு அச்சம் கொண்டனர். செய்வதறியாமல் தவித்த அவர்கள் பின்னர், பின்புறம் உள்ள கதவு வழியாக வெளியே சென்று, அருகிலுள்ள பள்ளி கட்டிடத்தில் தஞ்சம் புகுந்தனர். 

இருவரும் பின்னர் அக்கம்பக்கத்தினருக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த அப்பகுதி பொதுமக்கள் பட்டாசு வெடித்து சத்தம் எழுப்பி  யானையை விரட்டினர். கேரளாவின் மூணாரில் ஏற்பட்ட இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வாரத்திற்கு முன், இப்பள்ளியின் கழிப்பறைகளை யானை அடித்து நொறுக்கியது குறிப்பிடத்தக்கது.

காட்டுயானைகள் அதிகளவில் உணவு தேடி இரவில் வருவதால் இப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்துடன் உள்ளனர். வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக வெளியான பகீர் தகவல்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News