புதுடெல்லி: வாரணாசி ஞானவாபி மசூதி வளாகத்தில் இருந்து ஏராளமான சுடுமண் சிற்பங்கள் (Terracotta) கல் மற்றும் கண்ணாடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தொல்லியல் துறை (Archaeological Survey of India (ASI)) சமர்ப்பித்த ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. தற்போதுள்ள கட்டடம் கட்டப்படுவதற்கு முன்பு ஒரு பெரிய இந்து கோவில் இருந்ததாகக் கூறும். 839 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், தெய்வங்களின் உருவங்கள், ஆண் மற்றும் பெண் உருவங்கள், செங்கற்கள் மற்றும் ஓடுகள், கவண் பந்துகள் என பல்வேறு வகையான டெரகோட்டா பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக கூறுகிறது.
முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் (1676-77) ஆட்சியின்போது மசூதி கட்டப்பட்டது என்று எழுதப்பட்ட கல்வெட்டு இருந்தது. இந்தக் கல்வெட்டு மசூதியின் அறையிலிருந்து மீட்கப்பட்டதாகவும் ஆனால் மசூதியின் கட்டுமானம் மற்றும் விரிவாக்கம் தொடர்பான தகவல்கள் நீக்கப்பட்டிருந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மசூதியின் அமைப்பில் உள்ள 34 கல்வெட்டுகள், ஏற்கெனவே மசூதியின் கட்டுமானத்திலும் பழுதுபார்ப்பிலும் பயன்படுத்தப்பட்ட இந்து கோவிலின் கற்களிலும் இருந்ததாக ஏ.எஸ்.ஐ கூறுகிறது. இந்தக் கல்வெட்டுகளில் தேவநாகரி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Republic Day 2024: குடியரசு தினம் உருவான வரலாறு, முக்கியத்துவம் என்ன?
தற்போதுள்ள கட்டமைப்பில் உள்ள மேற்கு அறை மற்றும் மேற்கு சுவர் பகுதியில் இந்து கடவுளர்களான ஹனுமான் மற்றும் விநாயகரின் சிதைந்த உருவங்கள், சிவலிங்கம், விஷ்ணு, கிருஷ்ணர் சிற்பங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தொல்லியல் துறையின் அறிக்கை கூறுகிறது. மேலும் இரண்டு கண்ணாடி பொருட்கள், ஒரு பதக்கம் மற்றும் உடைந்த சிவலிங்கமும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த நாணயங்கள் மீட்கப்பட்டதாகவும் அவற்றில் முகலாய அரசர்கள் வெளியிட்ட மூன்று நாணயங்கள் பாரசீக மொழியில் இருப்பதாகவும் அறிக்கை கூறுகிறது. பல பிரிட்டிஷ்-இந்திய நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவை கிழக்கிந்திய கம்பெனி, ராணி விக்டோரியா, எட்வர்ட் VII மற்றும் ஜார்ஜ் V ஆகியோருக்கு சொந்தமானது என்றும், அரிப்பு காரணமாக அனைத்து நாணயங்களையும் அடையாளம் காண முடியவில்லை என்றும், மாதவ் ராவ் சிந்தியாவின் செப்பு நாணயம் ஒன்றும் கிடைத்ததாகவும் தெரிகிறது.
ஞானவாபி மசூதி வளாகத்தில் இருந்த ஒரு அமைப்பு 17 ஆம் நூற்றாண்டில் அழிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதி மாற்றியமைக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்பட்டது என்றும் அறிக்கை கூறுகிறது. தற்போது விஞ்ஞான ஆய்வுகளின் அடிப்படையில், தற்போதுள்ள கட்டிடம் கட்டப்படுவதற்கு முன்பு ஒரு பெரிய இந்து கோவில் இருந்ததாகக் கூறலாம் என்றும் இந்திய தொல்லியல் துறையின் அறிக்கை தெளிவுபடுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க | அண்டார்டிகாவில் மூவர்ணக் கொடியை ஏற்றி குடியரசு தின விழா கொண்டாடிய இந்திய கடற்படை!
ஞானவாபி மசூதி கட்டப்படுவதற்கு முன்பே அங்கு இந்து கோவில் இருந்தது என்று கூறும் இந்திய தொல்லியல் துறையின் கூற்றுப்படி, மசூதியில் வழிபாட்டுக்காக, அதன் கிழக்குப் பகுதியில் அடித்தளங்கள் ஏற்படுத்தப்பட்டதுடன் மசூதியில் தொழுகை நடத்தும் வகையில் மேடைகள் ஏற்படுத்தப்பட்டன.
கிழக்குப் பகுதியில் அடித்தளம் அமைக்க பயன்படுத்தப்பட்ட கோவிலின் தூண்கள், N2 எனப் பெயரிடப்பட்ட ரகசிய அறையில் மணிகள், விளக்கு நிலை மற்றும் சம்வத் கல்வெட்டுகள் அடங்கிய தூண் என அங்கு முன்பு கோவில் கட்டமைப்பு இருந்ததற்கான பல சான்றுகளை தொல்லியல் துறையின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஞானவாபி மசூதியில் சீல் வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் அறிவியல் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. நீரூற்று என்றும், வசுகானா என்றும் அழைக்கப்படும் அந்தத் தண்ணீர்த் தொட்டியில் சிவலிங்கம் இருப்பதாக இந்து தரப்பு கூறுகிறது.
எனவே, தொல்லியல் துறையின் இந்த அறிக்கை, ஞானவாபி வாளகம் தொடர்பான வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஔரங்கசீப் மசூதி கட்டுவதற்கு முன்பு வளாகத்தில் ஓர் இந்து கட்டடமும் கோவிலும் இருந்ததாகக் கூறும் ஏ.எஸ்.ஐ-யின் அறிக்கை இந்த வழக்கில் இந்து தரப்புக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது.
மேலும் படிக்க | ஆர்எஸ்எஸ்-ன் கைப்பாவையாக பிரதமர் மோடி செயல்படுகிறார் -காங்கிரஸ் தலைவர் கார்கே
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ