மும்பை: ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய ஆய்வு மையத்துக்கு சொந்தமான 10 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) எப்.ஐ.ஆர். போட்டுள்ளது. மேலும் ஜாகீர் நாயக்கின் ஆய்வு மையத்துக்கு மத்திய அரசு 5 ஆண்டுகாலம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்புக்கு மத்திய அரசு 5 வருடங்கள் தடை விதித்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெறும் ஜாகீர் நாயக், இளைஞர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபடுமாறு தூண்டுகிறார் என்பதும் அவர் மீதான குற்றச்சாட்டு. வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவர் தாம் ஜாகீர் நாயக்கின் பேச்சால் ஈர்க்கப்பட்டே இத்தகைய செயலில் ஈடுபட்டதாக கூறியிருந்தார். இதையடுத்தே ஜாகீர் நாயக்கின் தொண்டு நிறுவனத்தின் மீதான நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியது.