புதுடெல்லி: வாடிக்கையாளர் எச்சரிக்கை : வங்கிகள் இணைப்பு காரணமாக, பல வங்கிகளின் பழைய காசோலை புத்தகங்களை வாடிக்கையாளர்கள் புதுப்பிக்க வேண்டியிருந்தது. தற்போது மீண்டும் ஒரு வங்கி இணைக்கப்படுவதால், பிப்ரவரி 28 முதல் அதன் வாடிக்கையாளர்களுடன் பழைய காசோலை புத்தகம் இயங்காது. இத்தகைய சூழ்நிலையில் இந்த செய்தி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கவனிக்கத் தவறினால், எதிர்காலத்தில் சிக்கல்கள் சந்திக்க நேரிடலாம்.
ஐஎஃப்எஸ்சி மற்றும் எம்ஐசிஆர் குறியீடுகள் மாற்றப்பட்டன
இந்த செய்தி டிபிஎஸ் வங்கி இந்தியா லிமிடெட் மற்றும் லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். டிபிஎஸ் வங்கி இந்தியா லிமிடெட் (டிபிஐஎல்) லக்ஷ்மி விலாஸ் வங்கியுடன் (எல்விபி) இணைந்துள்ளது. அதன்படி இதன் ஐ.எஃப்.எஸ்.சி மற்றும் எம்.ஐ.சி.ஆர் குறியீடுகள் மாற்றப்பட்டுள்ளன. வங்கியால் வழங்கப்பட்ட புதிய ஐ.எஃப்.எஸ்.சி மற்றும் எம்.ஐ.சி.ஆர் குறியீடுகள் 25 அக்டோபர் 2021 முதல் செயல்படும். பழைய ஐ.எஃப்.எஸ்.சி குறியீடு 28 பிப்ரவரி 2022 முதல் மாற்றப்படும்.
மேலும் படிக்க | பிளிப்கார்ட் விற்பனை! 55 இன்ச் ஸ்மார்ட் டிவியை 17 ஆயிரத்தில் வாங்கலாம்
மார்ச் 1 முதல் புதிய ஐ.எஃப்.எஸ்.சி குறியீடு கட்டயாம்
டிபிஐஎல் வழங்கிய தகவலின்படி, இந்த வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு மார்ச் 1, 2022 முதல் என்இஎஃப்டி/ ஆர்டிஜிஎஸ்/ ஐஎம்பிஎஸ் மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய புதிய ஐ.எஃப்.எஸ்.சி குறியீடு தேவைப்படும். இதற்காக டிபிஐஎல் கிளைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் கடிதம் மூலம் தெரிவித்திருந்தது.
பிப்ரவரி 28, 2022 க்கு முன் ஏற்கனவே உள்ள அனைத்து காசோலைகளும் புதிய காசோலைகளுடன் மாற்றப்பட வேண்டும். இந்தத் தேதிக்குப் பிறகு, பழைய எம்.ஐ.சி.ஆர் குறியீட்டைக் கொண்ட காசோலைகள் ஏற்றுக்கொள்ளப்படாது. புதிய ஐ.எஃப்.எஸ்.சி குறியீடுகள் / எம்.ஐ.சி.ஆர் குறியீடுகளின் முழுமையான பட்டியலை www.lvbank.com/view-new-ifsc-details.aspx இல் காணலாம்.
மேலும் படிக்க | Flipkart Sale, வெறும் ரூ.764க்கு 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்கலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G