பகல் நேரத்தில் பெண்கள் நைட்டி அணிவதற்கு தடை விதித்து கிராம பஞ்சாயத்து புதிய சட்டத்தை கொண்டுவந்துள்ளது....
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தேக்கலப்பள்ளி கிராமத்தில் மதுக்கடை திறக்க அரசு அனுமதி வழங்கிய நிலையில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அருகில் உள்ள வேறு கிராமத்தில் மதுக்கடை திறக்கப்பட்டது. தடையை மீறி யாராவது ஊருக்குள் மது குடித்தால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், மது அருந்தியவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூபாய் 1000 பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து, கிராம மக்களும் அதனை தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நைட்டி அணிந்து பெண்கள் வீட்டை விட்டு வெளியில் நடமாட தடை விதித்து கிராம பஞ்சாயத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கிராம பஞ்சாயத்து உத்தரவை மீறி யாராவது நைட்டி அணிந்தால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி நைட்டி அணிந்தது குறித்து தெரிவித்தால் 1000 ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பெறக்கூடிய அபராத தொகையை கிராம வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என தண்டோரா அடித்து பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த முடிவு பெண்களுக்கு எதிரானது என பல மகளிர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதுகுறித்து தாசில்தார் சுந்தர்ராஜ், எஸ்.ஐ. விஜயகுமார் கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆனால் விசாரணையின் போது இதை எதிர்த்து யாரும் புகார் தெரிவிக்கவில்லை என்பதனால் அதிகாரிகளும் போலீசாரும் திரும்பிச் சென்றனர்.
Women in this Andhra Pradesh village are fined if seen in nighties before sunset
Read @ANI Story | https://t.co/8tAB0gSXPl pic.twitter.com/TFy7ckk14M
— ANI Digital (@ani_digital) November 10, 2018