அடி தூள்!! 8th Pay Commission அமலுக்கு பின் அதிரடி ஊதிய உயர்வு: அறிவிப்பு எப்போது?

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு மிக விரைவில் ஒரு அற்புதமான நல்ல செய்தி காத்திருக்கிறது. அவர்களது ஊதியத்தில் ஒரு பம்பர் உயர்வு ஏற்படவுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 14, 2023, 02:32 PM IST
  • 8வது சம்பள கமிஷன் 2024ம் ஆண்டு இறுதிக்குள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இதற்குப் பிறகு, இது ஓரிரு ஆண்டுகளில் செயல்படுத்தப்படலாம்.
  • அதாவது, இது 2025 இறுதியில் அல்லது 2026 தொடக்கத்தில் நடைமுறைக்கு வரலாம்.
அடி தூள்!! 8th Pay Commission அமலுக்கு பின் அதிரடி ஊதிய உயர்வு: அறிவிப்பு எப்போது? title=

7வது ஊதியக் குழு: ஏழாவது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களின் அடுத்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். ஆனால் இதற்கு முன் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தில் பெரும் உயர்வு இருக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன், அரசு ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில், ஒரு நல்ல செய்தியை அளிக்க அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகின்து. எனினும், 8வது ஊதியக்குழுவை அமைக்கும் திட்டம் இப்போது இல்லை என அரசு முன்னர் தெரிவித்ததால், இதை பற்றிய குழப்பமும் ஒரு புறம் நிலவுகிறது. 

முந்தைய ஊதியக்குழுவின் அடிப்படையில் கணக்கீடு இருக்கும்

8வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டால், அதன் படி, ​​ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய உயர்வு இருக்கும். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு சம்பள கமிஷன் அமைப்பு குறித்த விவாதம் நடக்கலாம். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 8வது ஊதியக் குழு பற்றி மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கரத்தும் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். 

எட்டாவது ஊதியக் குழு அமைக்கப்பட்ட பிறகு, மத்திய ஊழியர்களின் சம்பளம் மிகப்பெரிய அளவில் உயர்த்தப்படும். இந்த ஊதிய உயர்வு முந்தைய ஊதியக் குழுவுடன் ஒப்பிட்டு, அதன்படி செய்யப்படும். 

மேலும் படிக்க | 7th Pay Commission பம்பர் ஊதிய உயர்வு: டிஏ மட்டுமல்ல, இன்னும் பல கொடுப்பனவுகள் அதிகரிக்கும்

புதிய ஊதியக்குழு எப்போது அமல்படுத்தப்படும்?

8வது சம்பள கமிஷன் 2024ம் ஆண்டு இறுதிக்குள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகு, இது ஓரிரு ஆண்டுகளில் செயல்படுத்தப்படலாம். அதாவது, இது 2025 இறுதியில் அல்லது 2026 தொடக்கத்தில் நடைமுறைக்கு வரலாம். 7வது ஊதியக்குழுவுடன் ஒப்பிடும்போது 8வது ஊதியக்குழுவில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். ஃபிட்மென்ட் ஃபாக்டர் அடிப்படையில் சம்பள உயர்வு இருக்காது. மாறாக, வேறு சில ஃபார்முலா மூலம் சம்பளம் உயர்த்தப்படும்.

வெவ்வேறு ஊதியக்குழுக்களில் ஊதிய உயர்வின் கணக்கீடு: 

- நான்காவது ஊதியக் குழுவில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 27. சதவிகித உயர்வு இருந்தது. இதில், குறைந்தபட்ச ஊதியம் ரூ.750 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

- ஐந்தாவது ஊதியக் குழுவில் ஊழியர்களின் சம்பளத்தில் 31 சதவீத பெரிய ஏற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ. 2,550 ஆக உயர்ந்தது.

- ஆறாவது ஊதியக் குழுவில், ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.86 மடங்கு இருந்தது. இதன் காரணமாக ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 54 சதவீதம் அதிகரித்து அடிப்படை சம்பளம் ரூ. 7,000 ஆக உயர்ந்துள்ளது.

- ஏழாவது ஊதியக் குழுவில், ஃபிட்மென்ட் ஃபாக்டரை அடிப்படையாகக் கொண்டு, 2.57 மடங்கு உயர்வு ஏற்பட்டது. குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆக அதிகரித்துள்ளது. தற்போது ஃபிட்மென்ட் பேக்டரை அதிகரிக்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இது 2.57 மடங்காக உள்ளது.

குறைந்தபட்ச சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?

8வது ஊதியக் குழுவில் ஃபிட்மெண்ட்ர் ஃபாக்டர் அடிப்படையாக வைத்துக் கொள்ளப்படலாம். இதன் அடிப்படையில், ஊழியர்களின் ஃபிட்மென்ட் பாக்டர் 3.68 மடங்காக உயர்த்தப்படக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தில் 44.44% அதிகரிப்பு இருக்கலாம். ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ 26,000 அல்லது அதை விட அதிகமாக உயரலாம்.

மேலும் படிக்க | 8th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, விரைவில் 44% ஊதிய உயர்வு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News