கொரொனாவால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக இருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே டெக்ஸாமெதாசோன் மருந்தை தரவேண்டும் என WHO தலைவர் எச்சரிக்கை..!
ஸ்டீராய்டு டெக்ஸாமெதாசோனின் (Dexamethasone) உற்பத்தியை அதிகரிக்க உலக சுகாதார நிறுவனம் திங்களன்று பிரிட்டிஷ் மருத்துவ குழுக்களுக்கு வலியுறுத்தியுள்ளது, இது மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு மோசமான COVID-19 நோயாளிகளுக்கு உயிர் காக்கும் திறனைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்த பின்னர் WHO தலைவர் இந்த நடவடிக்கையை துவங்கியுள்ளார்.
இது குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்.... டெக்ஸாமெதாசோனின் குறைந்த அளவிலான கலவையை கொண்ட மருந்து பொதுவாக சில வகையான மூட்டுவலி, கடுமையான ஒவ்வாமை, ஆஸ்துமா மற்றும் சில வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. இது 10 நாட்களுக்குள் இறப்பு அபாயத்தைக் குறைக்கும் எனபதை கண்டறிந்துள்ளனர். இந்த மருந்தை, அதிகமாக நோயால் பாதித்த அதாவது வேண்டிலேட்டர்களில் வைக்கபட்டுள்ள கவலைக்கிடமான நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கண்டறியபட்டுள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை COVID-19 குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் WHO இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், ''உலகம் தற்போது எதிர்கொள்ளும் மிகப் பெரிய அச்சுறுத்தல் வைரஸ் அல்ல. ஒற்றுமையின்மை மற்றும் உலக அளவில் நிலவும் தலைமைப் பற்றாக்குறையே தற்போது நிலவும் அச்சுறுத்தல். பிளவுபட்ட உலகத்துடன் கொரோனாவை தொற்றுநோயைத் தோற்கடிக்க முடியாது. உலகம் முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், இது உடல் குறைபாட்டைவிட பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தப் பாதிப்பு தொடரும்’’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
READ | வேலை இல்லையா? கவலை வேண்டாம்; மணிக்கு ₹140 வரை சம்பாதிக்க ஒரு அரிய வாய்ப்பு!
மேலும், அவர் டெக்ஸாமெதாசோன் குறித்து கூறுகையில், கொரொனாவால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக இருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே டெக்ஸாமெதாசோன் மருந்தை கொடுக்க வேண்டும். லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு இந்த மருந்து பலன் தருகிறது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. மீறி பயன்படுத்தினார் அது பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.