டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஈலான் மஸ்க் (Elon Musk) உலகின் மிகப் பெரிய செல்வந்தராகிவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் வியாழக்கிழமையன்று செய்தி வெளியிட்டன.
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் (Amazon) நிறுவனர் ஜெஃப் பெசோஸ் முதலிடத்தில் இருந்தார். அவருக்கு அடுத்த இடத்தில் ஈலான் மஸ்க் இருந்தார்.
elon musk has just become the richest person in the world. here's a reminder that he is a con-man who cosplays as a self-made billionaire brain-genius even though he's the son of an apartheid south african emerald mine owner who got his wealth by sucking on the state's teat pic.twitter.com/Ydq1YjLjDH
— (@zei_squirrel) January 7, 2021
எலோன் மஸ்க் (Elon Musk) எலக்ட்ரிக் கார் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர் ஆவர். அதோடு, கடந்த ஆண்டை விட டெஸ்லாவின் பங்கு விலை உயர்ந்துள்ளது என்பதால் Elon Musk-இன் சொத்து மதிப்பு அதிகரித்துவிட்டது. ஈலோன் மஸ்க்கின் (Elon Musk) செல்வம் 185 பில்லியன் அமெரிக்க டாலர் என சிஎன்பிசி (CNBC) மதிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னதாக அமேசான் (Amazon) நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) உலகின் மிகப் பெரிய பணக்காரர் ஆக இருந்தார். இப்போது, எலோன் மஸ்க், அவரை முந்திவிட்டார் என்று அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.
Also Read | உனக்கு எப்போதும் தடா என டிரம்பை காலவரையின்றி தடை செய்தது Facebook
தென்னாப்பிரிக்காவில் பிறந்த எலான் மஸ்க்கின் தந்தை பொறியாளர்; தாயார் சத்துணவு நிபுணர். பன்னிரண்டு வயதிலேயே தன்னுடைய வீடியோ (Video) விளையாட்டுக்கு தானே குறியீடுகள் எழுதி அதனை விற்று சம்பாதித்த புத்திசாலி மஸ்க்.
கனடாவில் ஒண்டாரியோ கிங்ஸ்டனில் உள்ள குவீன்ஸ் பல்கலைக் கழகத்திலும் பின்னர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திலும் படித்தார். பொருளியல் மற்றும் தெரியியல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டங்கள் பெற்றார்.
Also Read | Washington DC-யில் அடுத்த 15 நாட்களுக்கு அவசரகால நிலை பிரகடனம்
1999 இல் ஒரு நிதி நிறுவனத்தைத் தொடங்கினார்.
ஜிப்2 குழுமத்தைத் தொடங்கி நடத்திச் சில காலம் கழித்து விற்றார்.
எக்ஸ் டாட் காம் என்ற குழுமத்தை 1999இல் தொடங்கினார்.
2002 இல் ஸ்பேஸ் எக்ஸ் என்ற குழுமத்தையும் 2003 இல் டெல்சா மோட்டார்ஸ் என்ற குழுமத்தையும் தொடங்கினார்.
2012 மே மாதத்தில் பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு ராக்கெட்டை அனுப்பினார்.
2016 இல் சோலார் சிட்டி என்ற குழுமத்தை வாங்கினார்.
Also Read | முதன் முறையாக தவறை ஒப்புக்கொண்ட Kim Jong Un: North Korea-வில் மாறுகிறதா சூழல்?
வணிக நோக்கில் விண்வெளியில் சுற்றுலாப் பயணம் செய்ய விண்கலத்தை உருவாக்கி மனிதர்களை அனுப்புவதே ஸ்பேஸ் எக்சின் முகாமையான அலுவல் ஆகும். மேலும் செவ்வாய்க்கோளுக்கு மனிதர்களைக் குடியேற்ற வேண்டும்; அது 2024 ஆம் ஆண்டில் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் எலான் மஸ்க். பிற கூட்டாளிகளுடன் இணைந்து எலான் மஸ்க் நிறுவிய டெஸ்லா மோட்டார்ஸ் தயாரித்த மின்சார பேருந்துகள் பிரபலமானவை.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR