உங்களுக்கு தொப்ப கிறிஸ்துமஸ் தாத்தா கதை தெரியுமா?

அவர் யார் என்று தெரியுமா அவர் தான் குண்டானவராக, வெள்ளை தாடியுடன், தொந்தி விழுந்த வயிறுடன், பல வண்ண உடையணிந்து வேடிக்கையானவராக சித்தரிக்கப்பட்டிருப்பாராம்.

Last Updated : Dec 23, 2017, 10:59 AM IST
உங்களுக்கு தொப்ப கிறிஸ்துமஸ் தாத்தா கதை தெரியுமா? title=

அவர் யார் என்று தெரியுமா அவர் தான் குண்டானவராக, வெள்ளை தாடியுடன், தொந்தி விழுந்த வயிறுடன், பல வண்ண உடையணிந்து வேடிக்கையானவராக சித்தரிக்கப்பட்டிருப்பாராம்.

இதுவரை எந்த குழந்தையும் அவரிடம் ஏமாந்ததில்லை தெரியுமா? சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் உற்சாகப் படுத்தும் கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ் தான் அவர்.

இந்த கிறித்துமஸ் தாத்தா. கிறிஸ்துமஸ் தினத்தன்று இனிப்புகளையும், பரிசுகளையும் குழந்தைகளுக்கு அள்ளி அள்ளி தந்து அவர்களை உற்சாகப்படுத்துவார்.

இந்த தாத்தா எப்படி உருவானார் என்பது உங்களுக்கு தெரியுமா. முதன்முதலில் அமெரிக்காதான் சாண்டா கிளாஸை  உருவாக்கியிருக்கிறது.

முதன்முதலில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போட்டவர் செயிண்ட் நிக்கோலஸ் தான். இவர் பிறந்தது தென் துருக்கியில் இருக்கும் லிசியாவில்தான்.

4ம் நூற்றாண்டை சேர்ந்த நிக்கோலஸ் பிஷப் பதவியில் இருந்தவர். குழந்தைகளிடம் அதிக பிரியம் கொண்டவராம். இப்போது வருவது போல் கிறிஸ்துமஸ்க்கு முதல் நாளன்று பின்னிரவில் கிறிஸ்துமஸ் தாத்தா வருவதில்லையாம்.

அவர் டிசம்பர் 6ம் தேதி இரவே வந்து கிறிஸ்துமஸ் பரிசுகள். பழங்கள், சாக்லெட்கள், சிறு பொம்மைகள், சிறு பொருட்களை பரிசாக கொடுப்பாராம். அதன் பின்னர் மறைந்து விடுவாராம்.

முதன் முதலில் 16ம் நூற்றாண்டில் சிலுவை போர் நடந்த போது செயின்ட் நிக்கோலஸ் ஐரோப்பாவிலிருந்து வெளியேற்றப்பட்டாரம்.பின்னர் ஏழைகள், இல்லாதவர்களுக்கு உதவும் பொருட்டே கிறிஸ்துமஸ் தாத்தா அவதரித்திருக்கிறார்.

இவருக்கு வாகனம் கூட உள்ளதாம் தெரியுமா. இது பறக்கும் மான் போன்றது. கிறிஸ்துமஸ் தாத்தா பறக்கும் மான் மூலம் பறந்து சென்றதாக கதைகளில் இருக்கின்றன.

மான் எப்படி பறக்கும், என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. கடும் குளிர் நிறைந்த துருவ பிரதேசங்களில் பறக்கும் மான் வகைகள் உள்ளன. விண்ணில் அவை பறந்து செல்வதை பார்க்கும் போது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். என்று கதைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பெருமை வாய்ந்த கிறிஸ்துமஸ் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்படும். அத்தகைய கிறிஸ்துமஸ் பெருவிழாவுக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ளன.

கிறிஸ்துமஸ் அல்லது கிறிஸ்து பிறப்பு விழா, கிறிஸ்தவர்களால் ஆண்டுதோறும் டிசம்பர் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை பெரும்பாலான கிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்றனர். அதேசமயம், கிழக்கு மரபு வழி திருச்சபைகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், ஜனவரி 7ம் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர்.

இந்தப் பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளின் முன்பாக கிறிஸ்துமஸ் மரங்களை அமைப்பது, நட்சத்திர விளக்குகள் மற்றும் சீரியல் விளக்குகளைத் தொங்கவிடுவது, இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும்விதமாக குடில் அமைப்பது என மகிழ்ச்சியுடன் பல வேலைகளைச் செய்துவைத்திருப்பார்கள். 

அத்துடன் புத்தாடை வாங்கி அணிவது, பட்டாசு கொளுத்துவது, கேக் வெட்டுவது, பலகாரங்கள் செய்வது என கிறிஸ்தவர்களின் வீடுகள் விழாக்கோலம் பூணும். ஆலயங்களிலும் கிறிஸ்துமஸை முன்னிட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கம்.

எனவே, அத்தகைய கிறிஸ்துமஸ் பண்டிகையில் வரவை எட்டி சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்து காத்து கொண்டிருகின்றனர்.

 

Trending News