புது தில்லி: இரவின் மூன்றாவது கடிகாரம் மிகவும் அசுபமானது என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகின் பெரும்பாலான மதங்கள் மற்றும் கலாச்சாரங்களில், மூன்றாவது கடிகாரம் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரையிலான நேரம் மூன்றாவது கால நேரமாக கருதப்படுகிறது. இதில், 3 மணி முதல் 4 மணி வரையிலான நேரம், 'மரண நேரமாக' கருதப்படுகிறது.
அதிகாலை 3 மணி நேரம் மிகவும் அசுபமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் பிசாசின் சக்தி உச்சத்தில் இருப்பதாகவும், மனிதன் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நேரத்தில் கண்கள் திடீரென திறப்பது, அதிக வியர்வை, விரைவான இதயத்துடிப்பு, கை கால்கள் ஜில்லிட்டு போவது ஆகியவை ஏற்படலாம்.
மருத்துவ விஞ்ஞானமும் இதை ஏற்றுக்கொள்கிறது
இந்த நேரம் மரண நேரமாக மட்டும் கருதப்படுவதில்லை, இதற்குப் பின்னால் ஒரு அறிவியல் உண்மையும் உள்ளது. அதாவது அதிகாலை 3 முதல் 4 மணி நேரம் மிகவும் ஆபத்தானது. மருத்துவ அறிவியலின் படி, மாலை 3 மணி முதல் 4 மணி வரை ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்பு 300 மடங்கு அதிகரிக்கிறது. இந்த நேரத்தில் அட்ரினலின் மற்றும் அழற்சி எதிர்ப்பு ஹார்மோன்களின் வெளியேற்றம் உடலில் வெகுவாகக் குறைவதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் உடலில் சுவாச மண்டலம் மிகவும் சுருங்குகிறது. ஒரு நாளின் மற்ற நேரத்துடன் ஒப்பிடும்போது இந்த நேரத்தில் இரத்த அழுத்தமும் மிகக் குறைவு.
ALSO READ | Dolphin Love: டால்பினுடன் ஆறு மாதங்கள் ‘உறவில்’ இருந்த விசித்திர மனிதர்..!!
14% மக்கள் தங்கள் பிறந்தநாளில் இறக்க வாய்ப்புள்ளது
காலை 6 மணிக்கு கார்டிசோல் ஹார்மோன் வேகமாக வெளியேறுவதால், ரத்தம் உறையும் அபாயம் அதிகம் என மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் அதிக ரத்த அழுத்தம் இரவு 9 மணிக்குத்தான் ஏற்படுகிறது. இதனால் மரணமும் ஏற்படலாம். அதே சமயம், 14 சதவீதம் பேர் பிறந்தநாளில் இறக்க வாய்ப்புள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேசமயம் 13 சதவீத மக்கள் அதிர்ச்சி காரணமாக இறக்கலாம் என்றும் கூறப்படுகிறது
3 முதல் 4 மணிக்கு தூக்கம் கலைந்து, கனவுகள் வரும்
இதுமட்டுமின்றி, பெரும்பாலான கனவுகள் இந்த அதிகாலை நேரத்தில்தான் வரும். அமானுஷ்ய ஆராய்ச்சியாளர்கள் அதிகாலை 3 மணி முதல் மாலை 4 மணி வரையிலான நேரத்தை 'பிசாசின் நேரம்' என்று அழைக்கின்றனர். இந்த நேரத்தில் பேய்களின் ஆற்ற்றல் மிக அதிகமாக இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். பெரும்பாலான மக்களுக்கு இந்த நேரத்தில் கனவுகள் வரும்.
ALSO READ | Black Cobra Viral Video: பாம்புக்கே தண்ணி காட்டறதுன்னா இது தானா ... !!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR