ராஜ யோகம் தரும் செவ்வாய் பெயர்ச்சி: 2022-ல் எப்போதெல்லாம் நிகழ்கிறது?

ஜாதகத்தில் செவ்வாயின் செல்வாக்கு உள்ளவர்கள், மக்கள் தலைவர்களாக, நல்ல பேச்சாளர்களாக, எதிரில் இருப்பவர்களை வார்த்தைகளால் வீழ்த்துபவராக இருப்பார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 18, 2021, 06:39 AM IST
  • செவ்வாய் கிரகத்துக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது.
  • செவ்வாய் கிரகம் தெய்வங்களின் தளபதி என்றும் அழைக்கப்படுகிறது.
  • செவ்வாயின் தாக்கத்தால் ஒருவருக்கு வீரமும், உற்சாகமும் உண்டாகும்.
ராஜ யோகம் தரும் செவ்வாய் பெயர்ச்சி: 2022-ல் எப்போதெல்லாம் நிகழ்கிறது?  title=

ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் கிரகத்துக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. செவ்வாய் கிரகம் அக்கினியாக கருதப்படுகிறது. இது தெய்வங்களின் தளபதி என்றும் அழைக்கப்படுகிறது. 

செவ்வாயின் தாக்கத்தால் ஒருவருக்கு வீரமும், உற்சாகமும் உண்டாகும். மேலும் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் ஆளும் கிரகமாகும். இது தவிர, செவ்வாய் மகரத்தில் உயர்ந்ததாகவும், கடகத்தில் நீச்சமாகவும் கருதப்படுகிறது. 

ஜாதகத்தில் செவ்வாயின்(Mars) செல்வாக்கு உள்ளவர்கள், மக்கள் தலைவர்களாக, நல்ல பேச்சாளர்களாக, எதிரில் இருப்பவர்களை வார்த்தைகளால் வீழ்த்துபவராக இருப்பார்கள். செவ்வாயின் சுப பலன் இருப்பவர்களுக்கு, இராணுவம் அல்லது காவல்துறையில் உயர் பதவிகள் கிடைக்கும். 2022ல் செவ்வாய் கிரகத்தின் இடமும் தாக்கமும் எப்போதெல்லாம் மாறப்போகின்றன என்பதை இந்த பதிவில் காணலாம். 

செவ்வாய் பெயர்ச்சி (Mars Transit in 2022) 

2022-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செவ்வாய் நுழைகிறார். பிப்ரவரியில், பிப்ரவரி 26 ஆம் தேதி, செவ்வாய் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறுகிறார். இதன் பிறகு ஏப்ரல் 07 ஆம் தேதி செவ்வாய் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார். 

அதன்பின் செவ்வாய் மே 17-ம் தேதி கும்ப ராசியிலிருந்து மீன (Pisces) ராசிக்குள் நுழைகிறார். ஜூன் 27ஆம் தேதி செவ்வாய் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்குள் நுழைகிறார். ஆகஸ்ட் 10ம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செவ்வாயின் மாற்றம் ஏற்படும். இதன்பிறகு அக்டோபர் 15 ஆம் தேதி செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு மாறுகிறார். நவம்பர் 14ஆம் தேதி செவ்வாய் மிதுன ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

ALSO READ | 2022-ல் தோல்வியை வெற்றியாக மாற்ற எந்த ராசிக்காரர்கள் என்ன செய்ய வேண்டும்?

2022 இல் செவ்வாயின் மாற்று திசை பயணம்

கடவுள்களின் தளபதியாகக் கருதப்படும் செவ்வாய், அக்டோபர் 30, 2022 முதல் ஒரு பிற்போக்கு இயக்கத்தைத் தொடங்குவார். மிதுன ராசியில் இருந்து செவ்வாயின் பிற்போக்கு இயக்கம் தொடங்கும். செவ்வாயின் பிற்போக்கு இயக்கம் ரிஷப ராசியில் முடிவடையும்.

செவ்வாயின் சுப யோகம்

செவ்வாயின் லக்ஷ்மி யோகம் மிகவும் மங்களகரமான யோகமாகும். செவ்வாயின் இந்த யோகத்தால் அதிர்ஷ்டம் ஒளிரும். சந்திரனும் செவ்வாயும் இணைவதால் லக்ஷ்மி யோகம் உண்டாகும். இந்த யோகம் ஒரு மனிதனை செல்வந்தனாக்கும். இது தவிர செவ்வாயின் ருச்சக் யோகமும் சிறப்பானதாக இருக்கும். ஜாதகத்தில் இந்த யோகம் உள்ளவர்கள் அரசனைப் போன்ற மகிழ்ச்சியைப் பெறுகிறார்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசிக்குள் பிரவேசிக்கும் ராகு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Trending News