கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில், மற்றொரு ஆணுடன் தொடர்பில் இருந்த பெண்ணை, கணவரின் உறவினர்கள், கொடுமைப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது..!
இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகளாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் (Social Media) மூலம் நம்மிடம் வந்து சேர்கிறது. அந்தவகையில், கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில், மற்றொரு ஆணுடன் தொடர்பில் இருந்த பெண்ணை, கணவரின் உறவினர்கள், கொடுமைப்படுத்திய விகாரத்தில் தொடர்பாக போலீசார் சிலரை கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் குணா பகுதியில் (Madhya Pradesh’s Guna), பெண் ஒருவரின் கழுத்தில் ஒரு சிறுவனை ஏற்றி, 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்க வைத்தது மட்டுமல்லாது, பெண் மெதுவாக நடக்கும்பட்சத்தில், அவரை குச்சியால் ஒருவர் அடிப்பது போன்ற வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வந்தன. இந்த வீடியோ, நெட்டிசன்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தி வந்தது.
#WATCH: A video went viral of a woman who was made to walk in MP's Guna while carrying a boy on shoulders. She had allegedly left her husband for someone else. Angered by this, her relatives also allegedly beat her
"Case registered. 3 of 4 accused arrested," said SP Guna(15.02) pic.twitter.com/LWTE9gwNWy
— ANI (@ANI) February 16, 2021
இது தொடர்பாக, குணா பகுதி போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண்,மற்றொரு ஆணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். கணவர் வீட்டில் இல்லாத சமயத்தில், அந்த ஆணுடன் வீட்டில் தனிமையில் இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த கணவரின் உறவினர்கள், அப்பெண்ணை எச்சரித்து உள்ளனர். அதை பொருட்டாக மதிக்காத அந்த பெண், தொடர்ந்து கள்ளஉறவை பேணி வந்துள்ளார்.
ALSO READ | கணவர் Like செய்த பெண்களின் படங்களை பிரிண்ட் செய்து பரிசாக வழங்கிய மனைவி!
இந்நிலையில், அந்த பெண்ணை பழிவாங்க (punished) நினைத்த கணவரின் குடும்பத்தினர், கணவரின் (ex-husband) சகோதரரான சிறுவனை, அப்பெண்ணின் கழுத்தில் ஏற்றி 3 கிலோமீட்டர் தொலைவிற்கு நடக்க வைத்து உள்ளனர். பெண், மெதுவாக நடக்கும்பட்சத்தில் குச்சியால் அவரை அடிக்கவும் செய்து அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ தொடர்பாக, குணா பகுதி போலீஸ், 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் பலர் இதுதொடர்பாக கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சம்பவங்கள், இனியும் நடைபெற கூடாது என்ற வகையிலான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்று நெட்டிசன்கள் உள்ளிட்ட மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR