ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு கிரகம் ராசியை மாற்றும் போதும், உதயமாகும்போதும், அஸ்தமிக்கும்போதும் அது அனைத்து ராசிகளையும் பாதிக்கின்றது. பல கிரகங்கள் 2022 இல் உதயமாகின்றன, பல கிரகங்கள் அஸ்தமிக்கின்றன. கர்மபலனின் அதிபதியான சனி பகவானும் உதயமாகவுள்ளார்.
சனி பகவான் பிப்ரவரி 24 அன்று உதயமாகிறார். சனியின் அஸ்தமனம் ஜனவரி 22 அன்று நடந்தது. சனிபகவான் மீண்டும் உதயமாகும் போது அது பல ராசிகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்:
ஜோதிட சாஸ்திரப்படி மேஷ ராசிக்காரர்களின் ஜாதகத்தில் 10-ம் பாகத்தில் சனி உதயமாக உள்ளார். இதனால் ஜாதகத்தில் ராஜயோகம் உருவாகி வருகிறது. மேஷ ராசியின் அதிபதியான செவ்வாய் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் ராஜசுகத்தை இவர்கள் பெறுவார்கள்.
வேலை இல்லாமல் அவதிப்பட்டவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்கள் மக்களிடம் நன்மதிப்பை பெறுவார்கள். மேஷ ராசிக்காரர்களுக்கு பொருளாதார ஆதாயம் ஏற்படும்.
மேலும் படிக்க | ராகு ராசி மாற்றம், இந்த ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன் கிடைக்கும்
ரிஷபம்:
பிப்ரவரி 24ல் சனிபகவான் உதயமாகும் போது ரிஷப ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ராஜயோகம் உருவாகும். எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்க இதுவே சிறந்த நேரமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் துவங்குவது அனைத்தும் துலங்கும். நீங்கள் கை வைக்கும் காரியம் வெற்றியடையும்.
அரசியலில் பெரிய பதவியையும் பெறலாம். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
கடகம்:
கடக ராசிக்கு ஏழாம் பாகத்தில் சனிபகவான் உதயமாகி இருப்பதால் ஜாதகத்தின் கேந்திரத்தில் ராஜயோகம் உருவாகி வருகிறது. நீங்கள் ஒருவருடன் கூட்டு சேர்ந்து வியாபாரம் செய்கிறீர்கள் என்றால், அதை தைரியமாகத் தொடரலாம். மிகப்பெரிய பொருளாதார பலன்களை அனுபவிக்கப் போகிறீர்கள்.
இரும்பு, பெட்ரோலியம், சுரங்கம் போன்ற சனி தொடர்பான வியாபாரம் செய்பவர்கள் சிறப்பான பலன்களைப் பெற வாய்ப்புண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். குழந்தைகள் மூலம் நன்மதிப்பைப் பெறுவீர்கள். கணவன் / மனைவியின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனை: கேது மாற்றம் கேடு விளைவிக்கும், எச்சரிக்கை தேவை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR