இந்து மதத்தில், வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கான உகந்த நாளாக கருதப்படுகிறது. அந்த வகையில், வெள்ளி கிழமை என்பது செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவிக்கு உகந்த நாளாகும். இந்நாளில் லட்சுமி தேவிக்கு விரதம் இருந்து சிறப்பு பூஜை செய்வதால், மகா லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைகிறாள்.
அன்னை லட்சுமி தேவியை மகிழ்விக்க வெள்ளிக்கிழமை செய்யப்படும் சில பரிகாரங்கள் மற்றும் பூஜைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அன்னை மகாலட்சுமியின் அருள் இருந்தால் வாழ்வில் அளவற்ற மகிழ்ச்சியும் வளமும் உண்டாகும். தேவையின் அருளாக் ஒருவன் பணக்காரனாகலாம். வாழ்க்கையில் எதற்கும் குறைவிருக்காது.
வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள்
பணம் வரவுக்கான பரிகாரம்:
வெள்ளியன்று ஒன்றரை கிலோ அரிசியை சிவப்பு துணியில் கட்டி வைக்கவும். அரிசி உடைபடாமல் முழுமையாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த அரிசி மூட்டையை கையில் எடுத்துக்கொண்டு, 'ஓம் ஸ்ரீம் ஸ்ரீயே நம' என்ற மந்திரத்தை உச்சரிக்கவும். குறைந்தது 108 முறை ஜபிக்கவும். இவ்வாறு செய்வதால், லட்சுமி தேவி மகிழ்ச்சியடைந்து, செல்வத்தை அள்ளித் தருவாள்.
தீர்க்க சுமங்கலியாக இருக்க செய்ய வேண்டியவை:
உங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும், நல்ல ஆரோக்கியத்திற்காகவும், வெள்ளிக்கிழமையன்று அன்னை லட்சுமி கோவிலுக்குச் சென்று, தேவிக்கு சிவப்பு நிற ஆடைகளை சமர்பிக்கவும். இனிப்பு பொருட்களையும் பிரசாதமாக வழங்குங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் அன்னை லக்ஷ்மி நீண்ட காலம் சுமங்கலியாக வாழ அருள்புரிகிறார்.
மேலும் படிக்க | மூங்கில் செடியை ‘இந்த’ திசையில் வைத்தால் பணத் தட்டுப்பாடு ஏற்படும்..!!
மகாவிஷ்ணுவின் அருள் பெற பரிகாரம்: அன்னை லட்சுமி தேவியின் கணவர் விஷ்ணு. வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீ லக்ஷ்மி நாராயணனைப் பாராயணம் செய்து பாயசம் பிரசாதம் செய்து வணங்குவது சிறந்தது. அன்னை லக்ஷ்மியுடன் சேர்த்து, விஷ்ணுவும் மகிழ்ச்சியடைந்து, வாழ்வில் வளங்கள் அனைத்தையும் பெற அருள் புரிவார்.
வீட்டில் எப்போதும் அன்னை மகாலட்சுமி வாசம் செய்ய மேற்கொள்ள வேண்டிய பரிகாரங்கள்: உங்கள் வீட்டில் அன்னை மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்ய வேண்டுமென்றால், வெள்ளிக்கிழமையன்று, 5 சிவப்பு மலர்களை கையில் எடுத்து, அன்னை லட்சுமியை தியானித்து, அந்த மலர்களை பெட்டகத்திலோ அல்லது பணப்பெட்டியிலோ வைக்கவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கல்வியில், வேலையில் வெற்றிகள் குவிய கம்யூட்டரை ‘இந்த’ திசையில் வைக்கவும்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR