Gold Rate Today: திடீரென உயர்ந்தது தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம் இதோ!!

இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 4,410 ஆக உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 312 ரூபாய் அதிகரித்து 35,280 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 22, 2021, 11:36 AM IST
Gold Rate Today: திடீரென உயர்ந்தது தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம் இதோ!!  title=

தங்கம் என்பது நம் நாட்டு மக்களுடன் பின்னிப்பிணைந்து விட்ட ஒரு விஷயமாகும். ஆபரணமாக அணிந்து அழகு பார்ப்பதற்கும், முதலீடாக வாங்கி வைப்பதற்கும், பங்குச் சந்தையில் வாங்கி விற்று பணம் ஈட்டவும், கவுரவத்தின் அடையாளமாகவும், ஒவ்வொருவர் இதை ஒவ்வொரு விதத்தில் வைத்திருக்க விரும்புகிறார்கள். அனைத்து வித விசேஷங்களிலும் தங்கத்துக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.

இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை (Gold Rate) ரூ. 4,410 ஆக உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 312 ரூபாய் அதிகரித்து 35,280 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. 

24 காரட் தூய தங்கத்தின் விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தூய தங்கம் இன்று 4,774 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு சவரன் 24 கார்ட தங்கம் 312 ரூபாய் அதிகரித்து ரூ. 38,192 ஆக விற்பனையில் உள்ளது. 

ALSO READ: Gold Rate Today: தங்க நகை வாங்கப் போறீங்களா? விலை நிலவரம் இதோ!!

இன்று காலை நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் வெள்ளி (Silver Rate) ரூ.65.01-க்கும் ஒரு கிலோ வெள்ளி 65,010 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. 

தேசிய அளவிலும் பல நகரங்களில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, பெங்களூருவில் 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 43,500 ஆகவும் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 47,460 ஆகவும் உள்ளது. ஹைதராபாத், திருவனந்தபுரம், விசாகப்படினம் ஆகிய நகரங்களிலும் இதே விலை நிலவரம்தான் உள்ளது. 

சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் பதற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கும்.

உலகளாவிய சந்தைகளில் (International Markets) நேர்மறையான அணுகுமுறை உள்ளதால், தங்கத்தில் முதலீடு செய்ய இது சரியான நேரமாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள். 

பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி (Tax) வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை மாறுபடுகிறது. மேலும், செய்கூலி மற்றும் சேதாரத்தின் அடிப்படையில் கடைக்கு கடை தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும்.

ALSO READ: Gold Hair: அறுவைசிகிச்சை மூலம் தலைமுடியை தங்க முடியாக மாற்றிய பாடகர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News