தங்க நகைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது, அதிலும் குறிப்பாக பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் எப்போதும் குறைந்ததில்லை. இப்போது பெண்களுக்கு நிகராக ஆண்களும் நகைகளை அணிய தொடங்கிவிட்டனர். பெரும்பாலான மக்கள் தங்க நகைகளை அழகு சேர்க்கும் ஆபரணமாக பார்ப்பது மட்டுமின்றி இதனை ஒரு பாதுகாப்பான முதலீடாகவே கருதுகின்றனர், அதனாலேயே பலரும் தங்கத்தை வாங்கி சேர்க்கின்றனர். குறிப்பாக பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்கு தங்கத்தின் அருமையை நன்றாகவே தெரிந்திருக்கும். பண்டிகை சமயங்களில் நகைகளை வாங்குவதை பலரும் அதிர்ஷ்டகரமானதாக பார்க்கின்றனர். இனிமேல் வரப்போகும் மாதங்கள் திருமணங்கள் அதிகம் நடைபெறும் மாதங்கள் என்பதால் தற்போது தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. தங்கத்தை ஆபரணமாக மட்டுமின்றி கட்டிகள், தங்கப்பத்திரங்கள் போன்ற வகைகளில் பலரும் வாங்குகின்றனர்.
மேலும் படிக்க | ஜனவரி மாதத்தில் 11 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறையா?
ஒருவரது வீட்டில் இவ்வளவு தான் தங்கம் இருக்க வேண்டும் என்று விதி உள்ளது, அந்த வரம்பிற்கு மேல் தங்கம் வைத்திருப்பவர்கள் அரசுக்கு வரி செலுத்த வேண்டும். மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வருமானம் அல்லது விவசாய வருமானம் அல்லது நியாயமான குடும்பச் சேமிப்பில் இருந்து பெறப்பட்ட அல்லது சட்டப்பூர்வமாக மரபுரிமையாகப் பெறப்பட்ட வருமானத்தில் இருந்து வாங்கப்பட்ட நகைகள் அல்லது தங்கத்திற்கு தற்போதுள்ள விதிகளின் கீழ் வரி விதிக்கப்பட இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தங்கத்தை வாங்கியதற்கு சரியான ஆதாரம் வைத்திருப்பவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என அரசு கூறியுள்ளது.
வீட்டிற்கு ரெய்டு வரும்போது, அரசு நிர்ணயித்த வரம்புக்கு உட்பட்டு வைத்திருக்கும் தங்க நகைகள் அல்லது ஆபரணங்களை அதிகாரிகள் வீட்டில் இருந்து கைப்பற்ற முடியாது என்று விதிகள் கூறுகின்றன. ஒரு திருமணமான பெண் 500 கிராம் வரையிலான தங்கத்தையும், திருமணமாகாத ஒரு பெண் 250 கிராம் வரை தங்கத்தையும் வைத்திருக்கலாம். அதேபோல ஒரு ஆண் 100 கிராம் தங்கத்தை வைத்திருக்கலாம். நண்பர்கள் அல்லது உறவினர்களிடமிருந்து பெறப்படும் தங்கத்திற்கு வரி விதிக்கப்படாது, ஆனால் அதை விற்கும்போது உங்களுக்கு வரி விதிக்கப்படும்.
மேலும் படிக்க | 7th pay commission முக்கிய செய்தி: டிஏ கணக்கீட்டில் மாற்றம், இனி இதற்கும் வரி உண்டு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ