ITR Filing: இவர்கள் ITR தாக்கல் செய்ய வேண்டாம், நிபந்தனைகளும் விதிமுறைகளும் இவைதான்

75 வயது அல்லது அதற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு 2021-22 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 14, 2021, 01:07 PM IST
  • வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 30 செப்டம்பரிலிருந்து 31 டிசம்பர் 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • 75 வயது அல்லது அதற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு 2021-22 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய நேரடி வரிகள் வாரியம் விதிகள் மற்றும் அறிவிப்புக்கான Form 12BBA-ஐ மூத்த குடிமக்களுக்காக நோடிஃபை செய்துள்ளது.
ITR Filing: இவர்கள் ITR தாக்கல் செய்ய வேண்டாம், நிபந்தனைகளும் விதிமுறைகளும் இவைதான் title=

Income Tax Return: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 30 செப்டம்பரிலிருந்து 31 டிசம்பர் 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வருமான வரி கணக்கை யார் தாக்கல் செய்ய வேண்டும், யார் தாக்கல் செய்ய வேண்டாம் என்பது குறித்த சில குழப்பங்கள் இன்னும் உள்ளன. சிலர் தங்களது சம்பளம் வருமான வரி வரம்பின் கீழ் வரவில்லை, அதனால் வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்ய வேண்டாம் என்று கருதுகின்றனர்.

வரி செலுத்துவதும், ITR தாக்கல் (ITR Filing) செய்வது இரண்டு வெவ்வேறு விஷயங்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, நீங்கள் வருமான வரியின் வரம்பில் வராமல் போனாலும், ITR தாக்கல் செய்ய வேண்டும்.

ஒருவரின் வருவாய் அடிப்படை விலக்கு வரம்புகளை (Basic Exemption Limits) மீறினால், அவர் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும். 60 வயதிற்குட்பட்ட, ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்கள்  அனைவரும் வரி செலுத்த வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட 80 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த வரம்பு ரூ .3 லட்சம் ஆகும். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரூ .5 லட்சம் வரை விலக்கு பெறுகிறார்கள்.

இவர்கள் ஐடிஆர் நிரப்ப வேண்டியதில்லை

75 வயது அல்லது அதற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு (Senior Citizens) 2021-22 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அமர்வில், 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வரி வருமானத்தை தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்திருந்தார். இதற்கு அவர்களது வருமான ஆதாரம் ஓய்வூதியம் மற்றும் வங்கியின் நிலையான வைப்பு (Fixed Deposit) மூலம் கிடைக்கும் வருமானமாக இருக்க வேண்டும்.

ALSO READ: ITR Filing தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது: கடைசி தேதி என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்

படிவம் 12BBA நோஃடிபை செய்யப்பட்டது

மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) விதிகள் மற்றும் அறிவிப்புக்கான Form 12BBA-ஐ மூத்த குடிமக்களுக்காக நோடிஃபை செய்துள்ளது. மூத்த குடிமக்கள் இந்த படிவத்தை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம், ஓய்வூதியம் மற்றும் வட்டி வருமானத்திற்கான வரி கழிக்கப்பட்டு அரசாங்கத்திடம் சேர்க்கப்படும். எந்த வங்கி கணக்கில் ஓய்வூதியம் டெபாசிட் செய்யப்படுகின்றதோ, அதே வங்கியில் வட்டியில் இருந்து வட்டி வருமானம் கிடைக்கும் கணக்குகளுக்கு மட்டுமே ITR தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு கிடைக்கும். இந்த படிவத்தை நிரப்புவது வரி செலுத்துவோருக்கு TDS கிளெய்மிலிருந்து நிவாரணம் அளிக்கும். அவர்களது வங்கி, அந்த வரி வரம்பில் வரவில்லை என்றால் வட்டி வருமானத்திலிருந்து 10% TDS-ஐ கழிக்காது.

இப்போது உள்ள விதிகள் என்ன?

தற்போது, ​​60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஒரு வருடத்தில் ரூ .50,000 க்கு மேல் சம்பாதிக்கும் FD வட்டிக்கு வங்கிகள் 10% TDS கழிக்கின்றன. ரூ. 5 லட்சத்தை விட குறைவாக இருக்கும் வருமானம் கொண்ட மூத்த குடிமக்கள், தங்கள் FD வட்டியில் இந்த கழிப்பை நிறுத்த படிவம் 15H ஐ தங்கள் வங்கிகளில் சமர்ப்பிக்கலாம். இருப்பினும், ரூ .5 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் டிடிஎஸ் பிடிப்பிலிருந்து தப்ப முடியாது. 10% என்ற விகிதத்தில் அவர்களது வட்டி வருமானத்தில் இருந்து டிடிஎஸ் (TDS) கழிக்கப்படுகிறது. கழிக்கப்பட்ட அதிக டிடிஎஸ்-ஐ பின்னர் திருப்பி பெற்றுக்கொள்ளலாம்.

படிவம் 12BBA-இன் பயன் என்ன?

படிவம் 12BBA ஐ நிரப்புவதன் மூலம், வரி செலுத்துவோர் வரித் தொகையைத் திரும்பப் பெறுவதில் சிரமப்பட வேண்டி இருக்காது. மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) அறிவிப்பின்படி, வங்கி மூத்த குடிமக்களின் வருமான வரியை 'பயனுள்ள விகிதங்களின்படி' கழிக்கும், அதாவது, பொருத்தமான வரி வரம்பின் கீழ் வரி கழித்தல் இருக்கும். FD வட்டிக்கு தனியாக TDS கழிக்கப்படாது. CBDT, செப்டம்பர் 2 அன்று படிவம் 12BBA -ஐ அறிவித்தது. மூத்த குடிமகக்கள் ITR தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு பெற, இதை அவர்களது வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

ALSO READ: வரி செலுத்துவோருக்கு பெரிய நிவாரணம்: ITR Filing-க்கான இந்த காலக்கெடு நீட்டிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News