நியூடெல்லி: ஏப்ரல் 1-ம் தேதி முதல் இளைஞர்களுக்கு வேலையில்லா உதவித்தொகையை அரசு வழங்க உள்ளது. வேலையின்மையால் அவதிபடுபவர்களுக்கு உதவித்தொகை தர அரசு முன்வந்துள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் இளைஞர்களுக்கு வேலையில்லா உதவித்தொகையை அரசு வழங்க உள்ளது. சத்தீஸ்கர் அரசு இதை ஏற்கனவே அறிவித்திருந்தது, ஆனால் ஏப்ரல் 1 முதல் இந்த திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.2500 வீதம் வழங்கப்படும். வேலையில்லா உதவித் திட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவான குடும்ப வருமானம் உள்ள வேலையற்ற இளைஞர்களுக்கு மட்டுமே இந்தத் திட்டத்தின் பலன் வழங்கப்படும்.
ஏப்ரல் 1, 2023 முதல் வேலையின்மை உதவித் திட்டம் செயல்படுத்தப்படும்
அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, ஏப்ரல் 1, 2023 முதல் மாநிலத்தில் வேலையின்மை உதவித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், வேலையில்லாதவர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ. 2500 நேரடியாகச் செலுத்தப்படும். வேலையில்லாதவர்களுக்கு திறன் மேம்பாட்டிற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டு வேலைவாய்ப்பைப் பெவும் அரசு ஆவண செய்யும்.
வேலையில்லாத் திண்டாட்டம் திட்டத்தில் பயன்பெறும் விண்ணப்பதாரரின் முழு குடும்பத்தின் வருமானம் ஆண்டுக்கு 2.50 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும். குடும்பம் என்பது கணவன்-மனைவி, சார்ந்திருக்கும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சார்ந்திருக்கும் பெற்றோர் என அனைவரின் வருமானமும் சேர்த்து குடும்ப வருமானமாக கணக்கிடப்படும்.
வேலையின்மை உதவித்தொகைக்கான தகுதி என்ன?
வேலையில்லாவர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள், சத்தீஸ்கரை பூர்வீகமாக கொண்டவராக இருக்க வேண்டும். இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் ஆண்டின் ஏப்ரல் 1ஆம் தேதியின்படி விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | மேக்கப்பில் பெண்களையே தோற்கடித்த ஆண்கள்! வைரலாகும் புகைப்படம்!
விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து குறைந்தபட்சம் உயர்நிலை, அதாவது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதனுடன், அவர் சத்தீஸ்கரின் ஏதேனும் ஒரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்பு வழிகாட்டுதல் மையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பித்த ஆண்டின் ஏப்ரல் 1 ஆம் தேதியின்படி அவரது வேலைவாய்ப்புப் பதிவு உயர்நிலையில் இருக்க வேண்டும்.
திட்டத்தின் பயனாளிகள் யார்?
இந்த திட்டத்தின் பலன், சொந்த வருமான ஆதாரம் இல்லாதவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் மற்றும் விண்ணப்பதாரரின் குடும்பத்தின் அனைத்து ஆதாரங்களில் இருந்தும் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். குடும்ப வருமானத்தை உறுதிப்படுத்தும் தாசில்தார் அல்லது உயர் வருவாய் அலுவலர் வழங்கிய வருமானச் சான்றிதழை வேலையின்மை உதவித்தொகைக்கு விண்ணப்பித்த நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க | ஒரு வருடத்தில் ஒரு மில்லியன் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு நிச்சயம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ