மருத்துவக் கல்வி என்பது அனைத்து மாணவர்களுக்கும் கனவாக இருக்கும் ஒன்று. இந்தியாவில் நீட் போன்ற தேர்வுகளால் பல்வேறு மாணவர்களின் கனவு சிதைந்து வருவதாக கூறப்படுகிறது. இது போன்ற சூழலில் தற்போது பல்வேறு மாணவ மாணவியர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து உள்ள நிலையில், அதற்கான வழிமுறைகளையும் மருத்துவ படிப்பிற்கான படிப்பு கிடைப்பதற்கும் சிறந்த மருத்துவராக மாற்றம் அடைவதற்கும் நிறைய கொச்சிங் செண்டர்கள் ஏஜென்சிகள் நிரம்பி வழிகின்றன.
ஆனால் சரியானவற்றை தேர்வு செய்வதே தற்போது குழப்பமாக உள்ள நிலையில் பெற்றோர்களும், மாணவர்களுக்கு பெரிய ஒரு இலகுவாக மருத்துவபடிப்பு படிப்பதற்கு ஒரு நாட்டில் பல்வேறு வசதிகள் கல்விமுறைகள் கிடைப்பது என்றால் அதை விட முடியுமா? என்ன... அப்படி ஒரு கால சூழலில் திமோர்-லெஸ்டே நாட்டில் படிப்பதற்கு அங்குள்ள பல்கலைகழகங்களும் முன் வந்துள்ளனர். அந்நாட்டின் அமைச்சர்களே நேரடியாக வந்து மருத்துவ படிப்பு குறித்து விளக்கம் கொடுத்துள்ளனர்.
அந்த வகையில், சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் திமோர்-லெஸ்டே நாட்டில் மருத்துவக் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமோர்-லெஸ்டே நாட்டைச் சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மேலும் அங்குள்ள பல்கலைக் கழகங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள பல்வேறு நிறுவனங்களும் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களுக்கு இண்டோமேட் edu கேர் நிறுவனத்தின் இயக்குநர் ராஜாதங்கப்பன் மற்றும் செயின் குலுக் இண்டர்நேஷனல் நிறுவன இயக்குநர் டாக்டர். ஐசிலின் பாஸ்கர் பேட்டியளித்தனர்.
மேலும் படிக்க | உணவை 32 முறை மென்று சாப்பிட வேண்டுமா... இப்படி செய்தால் உடல் எடையை குறைக்கலாமா?
திமோர்-லெஸ்டே இருக்கும் மூன்று பல்கலைக்கழகங்களும் வருங்காலத்தில் மருத்துவம் படிக்க ஒரு முக்கியமான இடங்களாக இருக்கும். மேலும் திமோர்-லெஸ்டே நாட்டில் இந்தியாவில் என்ன பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறதோ, அதுதான் அங்கேயும் பின்பற்றப்படுகிறது. இந்த படிப்பு நான்கரை வருடங்கள் இருக்கும். அதற்குப் பிறகு இன்டர்ன்ஷிப் போன்றவையும் அங்கு கிடைப்பதாக கூறினார்.
இந்தியாவில் படிக்கும் அதே மருத்துவம் திமோர்-லெஸ்டே நாட்டில் குறைந்த கல்வி கட்டணத்தில் கிடைக்கிறது. மேலும் அங்கிருக்கும் கல்வி முறை குறித்து கல்வியாளர்கள் ஆய்வு செய்து நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் 400 இடங்கள் உள்ளது. திமோர்-லெஸ்டே மருத்துவ படிப்பதன் மூலம் இந்தியாவில் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற எளிதாக இருக்கும்.
அங்கிருக்கும் சூழல் தென்னிந்தியாவை போன்று இருப்பதாகவும், பல்கலைக்கழக வளாகங்கள் நவீனமாக உள்ளது. அங்குள்ள பல்கலைக்கழகங்களில் இந்திய உணவுகள் வழங்கக்கூடிய விடுதிகளும் இருக்கிறது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் 400 இடங்கள் உள்ளது. திமோர்-லெஸ்டே மருத்துவ படிப்பதன் மூலம் இந்தியாவில் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற எளிதாக இருக்கும்" என்றனர்.
மேலும் படிக்க | பிரதமர் நரேந்திர மோடியின் மாத சம்பளம் மற்றும் செலவுகள் எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ