ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. கிரக மாற்றங்களால் ஏற்படும் விளைவுகள் சிலருக்கு சுபமாகவும் சிலருக்கு அசுபமாகவும் இருக்கலாம்.
மார்ச் 17-ம் தேதி ராகு மேஷ ராசியில் பிரவேசிக்கப் போகிறார். ஜோதிடத்தில், ராகு ஒரு நிழல் கிரகமாக கருதப்படுகிறது. இந்த கிரகம் பங்குச்சந்தை, பயணங்கள், ஆன்மீக பயணங்கள், வெளிநாட்டு பயணம், தொற்றுநோய்கள், அரசியல் போன்றவற்றுடன் தொடர்புடையது. மேஷ ராசியில் ராகு மாறுவதால் ஏற்படும் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இவற்றில் 3 ராசிக்காரர்களுக்கு மேன்மையான பண வரவு இருக்கக்கூடும்.
மிதுனம்:
ராகு மிதுன ராசிக்கு வது ஸ்தானத்தில் பிரவேசிக்கவுள்ளார். இது வருமான வீடாகக் கருதப்படுவதால், இந்த காலகட்டத்தில் வருமானம் அதிகரித்து, பல புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். அதே நேரத்தில், வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் முடிவடையும். மிதுன ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அரசியலில் ஈடுபடுபவர்கள் பல உயர் பதவிகளைப் பெறலாம். மேலும், மிதுன ராசிக்கு அதிபதியான கிரகம் புதன் என்று கருதப்படுகிறது. எனவே, இந்த காலகட்டத்தில் பங்குச் சந்தையில் லாபம் ஈட்ட நல்ல வாய்ப்புகள் உள்ளன.
மேலும் படிக்க | குரு பெயர்ச்சி, எந்தெந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
கடகம்:
இந்த ராசிக்காரர்களுக்கு ராகுவின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். இந்த ராசியில் ராகு ஒன்பதாம் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இது அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாட்டு பயணத்துக்கான ஸ்தானமாக கருதப்படுகின்றது. ஆகையால் இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் நீங்கள் பெறுவீர்கள். அதுமட்டுமின்றி, இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், நீங்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக மந்தமாக இருந்த வியாபாரமும் வேகமெடுக்கும். உணவகங்கள், தானியங்கள் அல்லது உணவு மற்றும் பானங்கள் தொடர்பான வணிகத்தில் உள்ள வணிகர்களும் சிறப்புப் பலன்களைப் பெறலாம்.
மீனம்:
மீன ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ராகு இரண்டாம் ஸ்தானத்தில் வரவுள்ளார். இது பணம் மற்றும் பேச்சுக்கான ஸ்தானமாக கருதப்படுகிறது. எனவே, இந்த காலகட்டத்தில் நிதி நிலைமை நன்றாக இருக்கும். திடீர் பண ஆதாயம் கூடும். மேலும், மீன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் சிக்கிய பணத்தையும் மீட்டெடுக்க முடியும். வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் அல்லது மார்க்கெட்டிங் துறையில் தொடர்புடையவர்கள் சிறப்புப் பலன்களைப் பெறலாம். அரசியலில் இருப்பவர்கள் பெரிய பதவிகளை பெறக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | செல்வங்களை அள்ளி தரும் சுக்கிரனை வலுப்படுத்த செய்ய வேண்டிய பரிகாரங்கள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR