Indian Railways பயணிகளுக்கான முக்கிய செய்தி: புக் செய்யும் முன் இதை செய்ய மறக்காதீர்கள்

ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது நீங்கள் சில சிறப்பு குறியீடுகளை கவனித்துக் கொள்ள வேண்டும், இல்லையெனில் நீங்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 4, 2021, 11:14 AM IST
Indian Railways பயணிகளுக்கான முக்கிய செய்தி: புக் செய்யும் முன் இதை செய்ய மறக்காதீர்கள்  title=

Indian Railways New Rules: ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது நீங்கள் சில சிறப்பு குறியீடுகளை கவனித்துக் கொள்ள வேண்டும், இல்லையெனில் நீங்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

பல்வேறு இடங்களின் முன்பதிவு குறியீடு மற்றும் கோச் குறியீட்டில் இந்திய ரயில்வே முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. ரயில்வே (Indian Railways) தனது ரயில்களில் ஒரு புதிய வகை குறியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் குறியீட்டின் மூலம், பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது இப்போது தங்களுக்கு விருப்பமான இருக்கையை தேர்வு செய்யலாம். இதைப் பற்றி இந்த பதிவில் விரிவாகக் காணலாம்.

டிக்கெட் முன்பதிவு செய்யும் போது இந்த குறியீட்டை மனதில் கொள்ளவும்

குறிப்பிடத்தக்க வகையில், ரயில்வே பல கூடுதல் கோச்களைத் தொடங்க உள்ளது. இதில் AC-3 டயரின் எகானமி கிளாசும் இருக்கும். இந்த வகை கோச்களில் (Railway Coaches) 3 பெர்த்துகள் இருக்கும். எகானமி கிளாசின் இந்த மூன்றாவது ஏசி கோச்சுகளில் சீட் புக்கிங்கிற்கான கட்டணம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.

விஸ்டாடோம் கோச் சிறப்பம்சம் வாய்ந்தது

சுற்றுலாத் துறையை மனதில் வைத்து, ரயில்வே இந்த வகை கோச்களை அறிமுகப்படுத்துகிறது. விஸ்டாடோம் கோச்களின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், பயணிகள் ரயிலுக்குள் அமர்ந்திருக்கும்போது வெளிப்புறக் காட்சியைப் பார்க்க முடியும். இந்த பெட்டிகளின் கூரையும் கண்ணாடியால் ஆனது.

ALSO READ: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது குறித்து முக்கியமான தகவலை வழங்கிய Indian Railways

ரயில்வே கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற ஒரு ரயிலை இயக்கும். தற்போது, ​​இந்த விஸ்டாடோம் கோச், மும்பையில் உள்ள தாதர் முதல் கோவாவின் மட்கான் வரை செல்கிறது.

இந்த வழியில் முன்பதிவு செய்ய வேண்டும்

இந்த அனைத்து பிரிவுகளின் கோச்கள் மற்றும் இருக்கைகளின் குறியீடுகள் பற்றி அனைத்து மண்டலங்களின் முதன்மை தலைமை வணிக மேலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், ஏசி-3 டயர் எகானமி கோச்சின் முன்பதிவு குறியீடு 3E ஆகவும், கோச்சின் குறியீடு M ஆகவும் இருக்கும். அதேபோல விஸ்டடோம் ஏசி கோச்சின் குறியீடு EV என வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோச்களின் பல்வேறு முன்பதிவு குறியீடு என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

பல வகை ரயில் பெட்டிகளின் புதிய முன்பதிவு குறியீடு மற்றும் ரயில் பெட்டிகளின் குறியீடு விபரம்  

ரயில் பெட்டி வகுப்பு  புக்கிங் குறியீடு  ரயில் பெட்டி குறியீடு
ஸ்லீப்பர் S.L.   S
ஏசி சேர் கார்   3A B
ஏசி 3 டயர் எகானமி      3E M
இரண்டாம் வகுப்பு ஏசி  2A A
கரிப் ரத் ஏசி 3 டயர்  3A G
கரிப் ரத் சேர் கார்   CC  J
முதல் வகுப்பு ஏசி   1A  H
எக்ஸிக்யூடிவ்  வகுப்பு  E.C  E
முதல் வகுப்பு F.C  F.C 
விஸ்டாடோம் V.S.              AC DV  
விஸ்டாடோம் (Vistadome) AC  E.V  E.V 
விஸ்டாடோம்  V.S  

ALSO READ: IRCTC New Rule: ஆதார் அட்டையுடன் IRCTC கணக்கை இணைத்தால் மிகப்பெரிய நன்மை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News