உலக வேட்டி தினம் இன்று! பாரம்பரியத்தை காப்போம்!

தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி ஜனவரி 6-ம் தேதியான இன்று உலக வேட்டி தினமாக கொண்டாடப்படுகிறது. 

Last Updated : Jan 6, 2020, 01:32 PM IST
உலக வேட்டி தினம் இன்று! பாரம்பரியத்தை காப்போம்! title=

தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி ஜனவரி 6-ம் தேதியான இன்று உலக வேட்டி தினமாக கொண்டாடப்படுகிறது. 

வேட்டி என்பது ஆண்கள் உடுத்தும் ஆடையாகும். தமிழர்களின் பாரம்பரிய உடையாகும். பெரும்பாலும் யாரும் தினமும் வேட்டி அணிவதில்லை. முக்கிய விழாக்களில் மட்டுமே அணிகின்றனர்.

சம்ஸ்க்ருத மொழியில் தவுத்தா எனவும் தோத்தி என ஒரியாவிலும், தோத்தியு என குஜராத்தியிலும், சூரியா என அசாமிய மொழியிலும், தூட்டி என வங்காள மொழியிலும், தோத்தி அல்லது கச்சே பான்ச்சே என கன்னட மொழியிலும்,‌ தோத்தர், அங்கோஸ்தர், ஆத்-செஸ்ச்சே அல்லது புத்வே என கொன்கனி மொழியிலும், முந்த்து என மலையாளத்திலும், தோத்தி அல்லது பன்ச்சா என தெலுங்கிலும், தோத்தர் என மராத்தியிலும், லாச்சா என பஞ்சாபி மொழியிலும் மற்றும் "மர்தானி" என உத்திரப் பிரதேசம், பீகார், டெராய், பகுதிகளிலும், தமிழில் வேட்டி என்று அழைக்கப்படுகிறது.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அனைவரும் அணியும் ஒரு சாதாரண உடையாக வேட்டி இருந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி இலங்கை, வங்காள தேசம் மற்றும் மாலத்தீவுகளிலும் வேட்டி பயன்பாட்டில் உள்ளது. அரசியல்வாதிகள், முக்கிய புள்ளிகள், சமுதாய மற்றும் பண்பாட்டு ஆர்வலர்கள் வேட்டியை அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளில் வேட்டி அணிவதை ஒரு பாரம்பரிய வழக்கமாக தென்னிந்தியாவில் உள்ள பெரும்பாலானோர் கடைபிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாரம்பரிய ஆடைகளை பாதுகாக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜனவரி 6 உலக வேட்டி தினமாக அனுசரிக்கப்படும் என யுனெஸ்கோ அறிவித்தது. இதனை அடுத்து மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் இன்று சர்வதேச வேட்டி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News