IRCTC ரயில் டிக்கெட் புக்கிங்கில் சலுகைகளை பெற... இந்த கிரெடிட் கார்டுகள் உதவும்

Train Ticket Booking Tips: ரயில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, பண பரிவர்த்தனைக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்துவது பிரபலமான தேர்வாக உள்ளது. ஏனெனில், இதன் மூலம் சிறந்த சலுகைகள் மற்றும் பிரத்யேக தள்ளுபடிகள் கிடைக்கின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 17, 2024, 03:43 PM IST
  • பண பரிவர்த்தனைக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்துவது பிரபலமான தேர்வாக உள்ளது.
  • ரயில் டிக்கெட் முன்பதிவிற்கான சில பிரபலமான கிரெடிட் கார்டுகள்.
  • வெகுமதி புள்ளிகள் மற்றும் சிறப்பு கேஷ்பேக் போன்ற சலுகைகளை பெறலாம்.
IRCTC ரயில் டிக்கெட் புக்கிங்கில் சலுகைகளை பெற... இந்த கிரெடிட் கார்டுகள் உதவும் title=

Train Ticket Booking Tips: இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய நெட்வொர்க்காக உள்ள நிலையில், தினமும் ரயில்கள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். ரயில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, பண பரிவர்த்தனைக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்துவது பிரபலமான தேர்வாக உள்ளது. ஏனெனில், இதன் மூலம் சிறந்த சலுகைகள் மற்றும் பிரத்யேக தள்ளுபடிகள் கிடைக்கின்றன. இதனால் குறைந்த கட்டணத்தில் ரயில் டிக்கெட் பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

கிரெடிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளப்படும், டிக்கெட் மும்பதிவுகளுக்கு, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் (IRCTC), ரயில்வே லவுஞ்ச் அணுகல், வெகுமதி புள்ளிகள் மற்றும் பலவற்றில் சிறப்பு கேஷ்பேக் போன்ற சலுகைகளை வழங்குகிறது. இந்நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவிற்கான பிரபலமான கிரெடிட் கார்டுகள் சிலவற்றை அறிந்து கொள்ளலாம்

SBI IRCTC பிளாட்டினம் கிரெடிட் கார்டு (SBI IRCTC Platinum credit card)

1. IRCTC முன்பதிவுகளில் 1.8% பரிவர்த்தனை கட்டண தள்ளுபடியைப் பெறலாம்.

2. AC1, AC2, AC3 மற்றும் IRCTC மூலம் செய்யப்படும் நாற்காலி கார் முன்பதிவுகளில் 10% மதிப்பை வெகுமதி புள்ளிகளாகப் பெறலாம்.

3. தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையங்களில் இலவச ரயில்வே லவுஞ்ச் அணுகல் வசதி.

4. மற்ற பரிவர்த்தனைகளிலும் SBI Rewardz புள்ளிகளைப் பெறலாம்.

5. எரிபொருள் அல்லாத பரிவர்த்தனைகளுக்கு செலவிடப்பட்ட ஒவ்வொரு 125 ரூபாய்க்கும் 1 ரிவார்டு பாயிண்ட்டை பெறலாம்.

SBI IRCTC பிளாட்டினம் கிரெடிட் கார்டு பெறுவதற்கான வருடாந்திர கட்டணம் ரூ. 500. மெம்பர்ஷிப் புதுப்பிப்பதற்கான கட்டணம் ரூ. 300.

கோடக் ராயல் சிக்னேச்சர் கிரெடிட் கார்டு (Kotak Royale Signature credit card)

1. ஐஆர்சிடிசி முன்பதிவுகளில் ₹500 வரை தள்ளுபடி பெறலாம். தள்ளுபடி வரம்பு ஆண்டுக்கு ரூ. 500.

2. கார்டைப் பயன்படுத்தி செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 4X வெகுமதி புள்ளிகளைப் பெறலாம்.

3. ரூ.500 மற்றும் ரூ.3000 வரம்பிற்குள் அனைத்து எரிபொருள் பரிவர்த்தனைகளுக்கும் 3% வரை தள்ளுபடி கிடைக்கும். 

4. விமான நிலைய இலவச அணுகல் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்வே ஓய்வறைகள் வசதி.

கோடக் ராயல் சிக்னேச்சர் கிரெடிட் கார்டு பெறுவதற்கான வருடாந்திர கட்டணம் பூஜ்யம். புதுப்பிப்பதற்கான கட்டணம் ரூ. 999.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு விரைவில்? தொழிலாளர்களின் கூட்டமைப்பின் கோரிக்கை, தீவிரமாக சிந்திக்கும் அரசு

HDFC பாரத் கேஷ்பேக் கிரெடிட் கார்டு 9 HDFC Bharat Cashback credit card)

1. IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவுகள், பயன்பாட்டு கட்டணங்கள் மற்றும் எரிபொருள் பரிவர்த்தனைகளில் 5% உடனடி கேஷ்பேக்கைப் பெறலாம்.

2. நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் பம்புகளிலும் 1% எரிபொருள் கூடுதல் கட்டணத் தள்ளுபடியை பெறலாம்.

3. பெரிய கொள்முதல் மற்றும் பரிவர்த்தனைகளுக்கு விரைவான EMI விருப்பங்களைப் பெறலாம்.

4. EasyEMI, PayZapp மற்றும் SmartBUY மூலம் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் 5% கேஷ்பேக் சலுகை.

HDFC பாரத் கேஷ்பேக் கிரெடிட் கார்டு பெறுவதற்கான வருடாந்திர கட்டணம் ரூ.500 . புதுப்பிப்பதற்கான கட்டணம் ரூ.500.

ஏர் இந்தியா எஸ்பிஐ சிக்னேச்சர் கிரெடிட் கார்டு (Air India SBI Signature credit card)

1. வருடாந்திர கட்டணம் வசூலிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் 20,000 வெகுமதி புள்ளிகளைப் பெறுலாம்.

2. ஒவ்வொரு முறையும் உங்கள் மெம்பர்ஷிப்பைப் புதுப்பிக்கும்போது 5000 புதுப்பித்தல் போனஸ் புள்ளிகளைப் பெறுங்கள்.

3. ஒரு காலாண்டிற்கும் இரண்டு இலவச உள்நாட்டு விமான நிலைய லவுஞ்ச் அணுகலை அனுபவிக்கலாம்.

4. இணையதளம் மூலம் ஏர் இந்தியா டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது பிரத்யேக சலுகைகளைப் பெறலாம்.

5. இந்தியா முழுவதும் உள்ள பெட்ரோல் பம்புகளில் 1% எரிபொருள் கூடுதல் கட்டணத் தள்ளுபடியைப் பெறுங்கள்.

ஏர் இந்தியா எஸ்பிஐ சிக்னேச்சர் கிரெடிட் கார்டு பெறுவதற்கான வருடாந்திர கட்டணம் ரூ. 4999. மெம்பர்ஷிப் புதுப்பிப்பதற்கான கட்டணம் ரூ. 4999

ரயில் டிக்கெட் புக்கிங்கில் பணத்தை சேமிக்க ரயில் பயண கடன் அட்டைகள் ஒரு சிறந்த வழியாகும். இருப்பினும், கிரெடிட் கார்டு ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், அட்டையின் நன்மைகள் மற்றும் குறைபாடுகளை நீங்கள் முதலில் பகுப்பாய்வு செய்ய வேண்டும். உங்களுக்கு எது மிகவும் பொருத்தமானது என்பதைப் பார்க்கவும். இதன் மூலம், உங்கள் கிரெடிட் கார்டில் இருந்து சிறந்த பலனைப் பெறவும் மேலும் சேமிக்கவும் முடியும்.

மேலும் படிக்க | SIP Mutual Fund: மாதம் ரூ.1000 முதலீட்டை ஒரு கோடி ரூபாயாக மாற்றிய முதலீட்டு ஃபார்முலா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News