எல்ஐசி லிஸ்டிங்: இன்சூரன்ஸ் துறை ஜாம்பவானான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) பங்குகள் செவ்வாயன்று இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. முதலீட்டாளர்களுக்கு இருந்த அச்சத்தை நிஜமாக்கும் வகையில், எல்ஐசி பங்குகள் வெளியீட்டு விலையில் இருந்து 8.62 சதவீதம் குறைவாகவே பட்டியலிடப்பட்டுள்ளன.
எல்ஐசி பங்கு மும்பை பங்குச்சந்தையான பிஎஸ்இ-யில் ரூ. 867.20 என்ற விலையில் வியாபாரத்தை தொடங்கியது. இந்த விலை வெளியீட்டு விலையான ரூ. 949 இலிருந்து 8.62 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) இது 8.11 சதவீதம் குறைந்து ரூ.872.00 இல் தொடங்கியது.
எல்ஐசியின் ரூ.21,000 கோடி மதிப்பிலான பிளாக்பஸ்டர் ஆரம்பப் பொதுப் பங்கீடு ( ஐபிஓ) மே 4-9 முதல் 6 நாட்களுக்கான சந்தா காலத்திற்குப் பிறகு 2.95 மடங்கு சந்தா பெற்று முதலீட்டாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாலர்களிடமிருந்து (QIBs) ஒதுக்கப்பட வேண்டிய பங்குகளுக்கு 2.83 மடங்கும், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களின் பங்குகள் 2.91 மடங்கும், சில்லறை தனிப்பட்ட முதலீட்டாளர்கள் பகுதியில் (RIIகள்) 1.99 மடங்கும் சந்தா செலுத்தப்பட்டது. இவை தவிர, பாலிசிதாரர்களின் பகுதி 6.12 மடங்கும்,எல்ஐசி பணியாளர்கள் பிரிவு 4.40 மடங்கும் சந்தா செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | LIC IPO: பை, செல், ஹோல்ட்? செய்ய வேண்டியது என்ன, நிபுணர்கள் கருத்து
எல்ஐசியின் வெளியீட்டு விலை முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்டது. தள்ளுபடியில் அடிப்படையில், அனைத்து பாலிசிதாரர்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் பங்குகளை முறையே ரூ.889 மற்றும் ரூ.904 என்ற விலையில் வழங்கப்பட்டும் என அறிவிக்கப்பட்டது.
அரசாங்கம் அதன் பாலிசிதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு 60 ரூபாய் மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் எல்ஐசி ஊழியர்களுக்கு தலா 45 ரூபாய் தள்ளுபடி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
எல்ஐசியின் ஐபிஓ-விற்கு, அரசாங்கம் ஒரு பங்கின் விலையை ரூ.902-949 வரை வைத்திருந்தது. இறுதி வெளியீட்டில் ஒரு பங்கின் விலை ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்புத் தள்ளுபடி காரணமாக, எல்ஐசி பாலிசிதாரர்கள் இந்தப் பங்குகளை ரூ.889க்கும், சில்லறை முதலீட்டாளர்கள் ரூ.904க்கும் பெறுவார்கள். சந்தை ஆய்வாளர்கள் இது குறித்த குழப்பான மனநிலையிலேயே இன்னும் உள்ளனர். சில நிபுணர்களின் கூற்றுப்படி, எல்ஐசியின் பங்குகள் 10 சதவீத பிரீமியத்தில் பட்டியலிடப்படலாம். சிலர் குறைந்த விலையில் பட்டியலிடுவதற்கான சாத்தியத்தை வெளிப்படுத்துகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR