மிகவும் பிடிவாத குணம் கொண்டவர் இந்த 4 ராசிக்காரர்கள்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாதமாகவும், கண்டிப்பான இயல்புடையவர்களாகவும் இருப்பார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 16, 2021, 03:55 PM IST
மிகவும் பிடிவாத குணம் கொண்டவர் இந்த 4 ராசிக்காரர்கள் title=

ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாதமாகவும், கண்டிப்பான இயல்புடையவர்களாகவும் இருப்பார்கள். ஜோதிடத்தின் படி ஒருவரின் பொதுவான குணநலன்களை அறிய முடியும். ஒருவருக்கு பிடிவாத குணம் அதிகமாக இருப்பின், அவர் கண்டிப்பாக அமைதியான மனநிலையுடன் இருக்க வேண்டும். மேலும் பகுத்தறிவுடன் செயல்படுவது அவசியம்.

அந்த வகையில் யாரெல்லாம் மிகவும் பிடிவாதமானவர்கள் என்பதை இங்கு பார்ப்போம்.

ALSO READ | ஜோதி வடிவாய் அருளும் ஈசனின் 12 ஜோதிர்லிங்கங்களின் சிறப்புகள்

ரிஷபம் - ரிஷபம் ராசிக்காரர்கள் (Rasipalan) கடின உழைப்பாளிகள், புத்திசாலித்தனம் மற்றும் கூர்மையான மூளை உள்ளவர்கள். இவர்கள் தான் எடுத்த முடிவில் உறுதியாகவும், அதை அடைய விடாமுயற்சியுடன் செயல்படுவார்கள். அவர்கள் தனியாக முடிவெடுப்பார்கள், யாரும் அவர்களை ஒரு முடிவுக்கு தள்ள முடியாது. இவர்களின் பிடிவாதம் ஒரு உறவில் ஒரு நேர்மறையான விஷயம், ஏனெனில் இவர்களின் உறவிலான பிணைப்பை சிறப்பாக கொண்டு செல்ல முயற்சிப்பார்கள்.

சிம்மம் - சிம்ம ராசியினர் ஆளுமை மிக்க நபர்கள் மட்டுமில்லாமல், மிகவும் உணர்ச்சிமிக்க மற்றும் பிடிவாதமானவர்களும் கூட. இது தவிர, இவர்களும் மிகவும் பிடிவாதமாக உள்ளனர். உங்களின் பிடிவாதத்தால் புதிய சிந்தனைகளை நடைமுறைப் படுத்த, முயற்சி செய்ய கற்றுக் கொள்ளுங்கள். மேலும் இந்த ராசியினரை கையாள்வது கடினம்.

கன்னி - கன்னி ராசிக்காரர்கள் கண்டிப்பான மற்றும் பிடிவாத குணம் கொண்டவர்கள். அவர்கள் தங்கள் பிடிவாதத்தில் ஒட்டிக்கொண்டு அதை நிறைவேற்றிய பின்னரே ஏற்றுக்கொள்கிறார்கள். இதனால் சில நேரங்களில் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது. இருப்பினும், இந்த குணம் அவர்களுக்கு வெற்றியை அளிக்கிறது.

விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் வார்த்தைகளாலும் சூழ்நிலைகளாலும் எந்த வகையிலும் சமரசம் செய்து கொள்ள விரும்ப மாட்டார்கள். மேலும் இவர்கள் ஒரு இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி உறுதியாக செல்வார்கள். அதற்கான முழு அர்ப்பணிப்பு அவர்களிடம் இருக்கும்.

ALSO RRAD | தன்தேராஸ் கொண்டாடப்படும் காரணம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News