விமான நிலையம் வழங்கும் doorstep சேவை; இனி லக்கேஜ் பற்றிய கவலையே இல்லை..!!

Airport Luggage Service: தில்லி விமான நிலையம், வழங்கும் புதிய 'அவான் எக்ஸஸ்' சேவை மூலம் உங்களது லக்கேஜ்கள் உங்கள் வீட்டிற்கே வந்தடையும். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 3, 2021, 03:27 PM IST
விமான நிலையம் வழங்கும் doorstep சேவை; இனி லக்கேஜ் பற்றிய கவலையே இல்லை..!! title=

Airport Luggage Service: விமான பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.  நிறைய லக்கேஜ்களை எடுத்துச் செல்லும் விமானப் பயணிகளுக்கு, டெல்லி விமான நிலையம் ஒரு புதிய வசதியைத் தொடங்கியுள்ளது. இதன் கீழ், உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகள் தங்கள் சாமான்களை, சுமந்து செல்ல வேண்டியதில்லை. சாமான்களை நேரிடையாக வீட்டிற்கே வந்து சேரும்.

இந்த வசதி 2020 ஆம் ஆண்டில் சென்னை மற்றும் மும்பை விமான நிலையங்களில் தொடங்கப்பட்டது. இந்த சேவை இப்போது டெல்லியில் தொடங்கப்படுகிறது.  இதுவரை டெல்லி விமான நிலையத்தில் விமானம் மட்டுமே விமானம் மூலம் பொருட்களை அனுப்பி வரும் நிலையில், இப்போது பயணிகள் சாலை வழியாகவும் லக்கேஜ்களை அனுப்பலாம். இதனால், கட்டணமும் கணிசமான அளவில் குறையும்.

ALSO READ | வீட்டுக் கடனை வேறு வங்கிக்கு மாற்றுவது நல்லதா? நிபுணர்கள் கூறுவது என்ன..!!

விமானப் பயணிகளின் சாமான்கள் வீட்டிற்கே வந்து சேரும்

டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் (DIAL) இந்த சேவைக்காக, டெல்லி விமான நிலையத்தின் 3 வது முனையத்தில் உள்ள 'Avaan Excess' கவுண்டருக்கு சென்று பயணிகள் தங்கள் கூடுதல் சாமான்களை முன்பதிவு செய்ய வேண்டும். பயணிகள் தங்கள் விருப்பப்படி,  சாமான்களை விமானம் அல்லது சாலை வழியாக அனுப்பலாம். இதன் மூலம், பயணிகள் இனி தங்கள் சாமான்களை பெற விமான நிலையத்தில் காத்திருந்து நேரத்தை வீணாக்க வேண்டியதில்லை, அவர்கள் தங்கள் பயணிகளை முடித்துக் கொண்டு நேராக தங்கள் இலக்குக்கு செல்லலாம். அவர்களின் சாமான்கள் பாதுகாப்பாக கொடுக்கப்பட்ட முகவரிக்கு வழங்கப்படும்.

ALSO READ | LIC: தினம் ₹121 போதும், செல்ல மகளின் திருமணத்திற்கு ₹27 லட்சம் உங்கள் கையில்

 

சாமான்களை சாலை வழியாகவும் கொண்டு செல்ல முடியும்

இந்த சேவையில் அதன் பங்குதாரர், Avaan Excess திட்டத்தில், விமானம் மூலம் அனுப்பினால், 72 மணி நேரத்தில் பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்கப்படும் என தில்லி விமான நிலைய நிறுவனம் கூறுகிறது. சாலை வழியாக டெலிவரி செய்ய விரும்பினால், பொருட்கள் 4-7 நாட்களுக்குள் வீட்டிற்கு நேரிடையாக அனுப்பப்படும். முன்பதிவு செய்யப்பட்ட சாமான்களின் பாதுகாப்பிற்காக காப்பீடு செய்யப்படும்.

கட்டண விபரம்

விமானம் மூலம் பொருட்களை அனுப்ப பயணிகள் அதிக பணம் செலுத்த வேண்டும், ஆனால்  சாலை மூலம் அனுப்பினால், கண்டனம் கணிசமான அளவில் குறையும். சாலை வழியாக 7 கிலோ வரை சாமான்களுக்கு கிலோவுக்கு ரூ .101  என்ற அளவிலும், ஒரு கிலோவுக்கு மேல் மற்றும் 15 கிலோ வரை உள்ள சாமான்களுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ. 67 என்ற அளவில் வசூலிக்கப்படும். நீங்கள் உங்கள் சாமான்களை விமானம் மூலம் அனுப்பினால், 7 கிலோ வரை நீங்கள் ஒரு கிலோவுக்கு 236 ரூபாய் செலுத்த வேண்டும், 1 கிலோவிற்கு மேல் மற்றும் 15 கிலோ வரை  ஒரு கிலோவுக்கு 183 ரூபாய் செலுத்த வேண்டும்.

ALSO READ: EPFO Good News: PF கணக்கில் வரவுள்ளது 8.5% வட்டித் தொகை, விரைவில் அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News