ஆன்லைன் தளங்கள் இப்படித்தான் நம்மளை ஏமாத்துறாங்களா?

அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்கள் பொருட்களை விற்க சில யுக்திகளை கையாள்கின்றன.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 6, 2022, 10:29 AM IST
  • கடைசி பொருளை வாங்க மனம் ஏங்கும்.
  • ஆன்லைன் தளங்கள் சில யுக்தியை கடைபிடிக்கின்றன.
ஆன்லைன் தளங்கள் இப்படித்தான் நம்மளை ஏமாத்துறாங்களா?  title=

பொதுவாக ஒரு பொருள் நம்மிடம் இருக்கும் பொழுது அதை பயன்படுத்தாமலே வைத்திருப்போம், அதே பொருளை மற்றவர் நம்மிடமிருந்து கேட்கும்போது நான் அதன் அருமை நமக்குத் தெரியவரும்.  இருக்கும் பொழுது அருமை தெரியாது, போன பின்பு தான் அருமை தெரியும் என்ற பழமொழியும் உண்டு, இது பொருள்களிலிருந்து உறவுகள் வரை பொருந்தும். 

மேலும் படிக்க | உடனே முந்துங்கள்! ஆப்பிள் ஐபோன் 13 வாங்க இதுதான் சிறந்த நேரம்!

பொதுவாக ஏதாவது ஒரு பொருளை நாம் வாங்கும் பொழுது கடைசியில் ஒன்று மட்டும் தான் இருக்கிறது என்று தெரிந்தால், அதனை வாங்குவதற்கு நம் மனம் ஏங்கும்.  நமக்குல் ஒரு கியூரியாசிட்டி உருவாகி அந்த குறிப்பிட்ட பொருளை வாங்க வைக்கும்,  இதுதான் மனித இயல்பு. ஆன்லைன் தளங்களில் நாம் குறிப்பிட்ட ஒரு பொருளை தேடும்போது,  ஐந்து ஸ்டாக் மட்டுமே உள்ளது ஒரு ஸ்டாக் மட்டுமே உள்ளது என்று அதில் போடப்பட்டிருக்கும். நாமும் பதறிப்போய் உடனடியாக அந்த பொருளை ஆர்டர் செய்து விடுவோம், பின்பு எத்தனை நாட்கள் கழித்து பார்த்தாலும் அதே போல் தான் இருக்கும்.  

amazon

ஒரு பொருள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதன் மீது நம் ஆர்வம் போகாது, மாறாக மற்ற பொருள்களையும் பார்ப்போம். அதே சமயத்தில் ஒன்று மட்டுமே இருக்கும் பட்சத்தில் அதை எப்படியாவது அதனை வாங்கிவிட நாம் எண்ணுவோம். இதைத்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்படுத்தி நம்மை பொருள்களை வாங்க வைக்கின்றார். பிலிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் இதனை ஒரு வியாபார உத்தியாக கடைபிடிக்கின்றனர்.  புதிதாக ஒரு போன் மாடல்களை அறிமுகப்படுத்தும் போது, அதிகமாக ஸ்டாக் வைக்காமல் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்வர். இதனால் அந்த பொருளின் மீது ஆர்வம் அதிகமாகி நாம் வாங்குவோம், சில நிமிடங்களில் ஸ்டாக் காலியாகிவிடும்.  பின்பு அடுத்த ஸ்டாக் வரும் முறை நாம் பொறுத்திருந்து  வாங்குகிறோம்.  

மேலும் படிக்க | உங்களை மற்றொருவருடன் ஒப்பிடுவது சரியா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News