குழந்தைகளின் பெயரில் வங்கியில் முதலீடு! அரசு கொடுக்கும் சலுகை!

பிபிஎஃப் கணக்கை திறக்க நீங்கள் வங்கிக்கு சென்று படிவம் 1-ஐ நிரப்பவேண்டும், முன்னர் இந்த படிவம் 'ஏ' என்று அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.   

Written by - RK Spark | Last Updated : Oct 5, 2022, 11:59 AM IST
  • பிஎஃப் கணக்கு திறப்பதற்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை.
  • எந்த வயதிலும் இந்த கணக்கை திறக்கலாம் மற்றும் முதலீடு செய்யலாம்.
  • இந்த தொகையானது குழந்தைக்கு 18 வயதில் கிடைக்கப்பெறும்.
குழந்தைகளின் பெயரில் வங்கியில் முதலீடு! அரசு கொடுக்கும் சலுகை! title=

பணவீக்கம் அதிகரிக்க அதிகரிக்க எதிர்கால நிதி பற்றிய கவலை மக்களிடத்தில் அதிகரித்துக்கொண்டே வருகிறது.  அதிலும் குறிப்பாக பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகளின் கல்வி முதல் திருமணம் வரையிலான பல்வேறு செலவினங்களை பற்றி கவலை கொண்டிருக்கின்றனர்.  இதுபோன்ற எதிர்கால நிதித்தேவைகளை சமாளிக்க தான் பல்வேறு முதலீட்டு திட்டங்கள் உதவுகின்றன, அந்த வகையில் நம்பகரமானதாகவும் நல்ல வருமானம் ஈட்டுவதாகவும் செயல்படுகிறது பிபிஎப்.  குழந்தைகளுக்கு பொது வருங்கால வைப்பு நிதி கணக்கை தொடங்கி ஒவ்வொரு மாதமும் டெபாசிட் செய்வதன் மூலம் அந்த குழந்தையின் எதிர்காலத்திற்கு தேவையான நிதியை உங்களால் பெறமுடியும்.  பிபிஎஃப் கணக்கு திறப்பதற்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை, எந்த வயதிலும் இந்த கணக்கை திறக்கலாம் மற்றும் முதலீடு செய்யலாம்.  

மேலும் படிக்க | 7th Pay Commission: அகவிலைப்படி உயர்வால் கிடைக்கும் பம்பர் ஊதிய உயர்வு, கணக்கீடு இதோ 

பிபிஎஃப் கணக்கை திறக்க நீங்கள் வங்கிக்கு சென்று படிவம் 1-ஐ நிரப்பவேண்டும், முன்னர் இந்த படிவம் 'ஏ' என்று அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  படிவத்தை நிரப்பிய பின்னர் முகவரி சான்றுக்காக பாஸ்போர்ட், நிரந்தர ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார், ரேஷன் கார்டு போன்றவற்றை கொடுக்கலாம்.  அடையாளச் சான்றுக்கு பான் கார்டு, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை கொடுக்கலாம்.  அதனைத்தொடர்ந்து குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டையும்  கொடுக்க வேண்டும்.  மேற்கண்ட ஆவணங்களை கொடுத்த பின்னர் கணக்கில் குறைந்தபட்சம் ரூ. 500 அல்லது அதற்கு மேற்பட்ட செக்கை கொடுக்க வேண்டும், கணக்கிற்கான செயல்முறை முடிந்தது குழந்தையின் பெயரில் பாஸ்புக் வழங்கப்படும்.

இப்போது குழந்தை 3 வயதாக இருக்கும்போதே நீங்கள் பிபிஎஃப் கணக்கை தொடங்கி டெபாசிட் செய்ய தொடங்கிவிட்டீர்கள் என்றால் அந்த குழந்தை 18 வயதை அடையும்போது பிபிஎஃப் கணக்கு முதிர்ச்சியடையும். ஒவ்வொரு மாதமும் தவறாமல் நீங்கள் குழந்தையின் பிபிஎஃப் கணக்கில் ரூ. 10,000 என 15 ஆண்டிகளுக்கு டெபாசிட் செய்கிறீர்கள் எனில் உங்களுக்கு 7.10% வட்டியுடன் சேர்த்து பிபிஎஃப் கணக்கின் முடிவில்  ரூ.32,16,241 கிடைக்கும், இந்த தொகையானது குழந்தைக்கு 18 வயதில் கிடைக்கப்பெறும்.

மேலும் படிக்க | கார் வாங்கணுமா? பண்டிகை காலத்தில் இந்த வங்கிகளில் மிக மலிவான கார் கடன் கிடைக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News