Rose Day 2023: மலர் போல் மணக்கும் காதலுக்கு ஜே! ’ரோஸ் டே” கொண்டாடலையா?

Happy Rose Day 2023 date: நித்தம் நித்தம் காதல் செய்தாலும், அதை ஒரு நாளில் குறிப்பிட்டு, அதைப் பற்றியே உலகம் பேசும் நாள் பிப்ரவரி-14 காதலர் தினம். காதலர் தினத்திற்கு கட்டியம் கூற அதற்கு முன்னதாகவே வருவது ’ரோஸ் டே”

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 6, 2023, 03:10 PM IST
  • பிப்ரவரி-14 காதலர் தினம்
  • காதலர் தினத்திற்கு காட்டியம் கூறும் ’ரோஸ் டே”
  • மலர் போல் மணக்கும் காதலுக்கு ஜே
Rose Day 2023: மலர் போல் மணக்கும் காதலுக்கு ஜே! ’ரோஸ் டே” கொண்டாடலையா? title=

இயற்கையை கொண்டாட ஒரு நாள் போதுமா என்று கேள்வி கேட்பவரா நீங்கள்? அப்படி என்றால், காதலர் தினத்தை கொண்டாட மட்டும் ஒரு நாள் போதுமா? என எதிர்கேள்வி கேட்கவும் லட்சக்கணக்கான காதலர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், நித்தம் நித்தம் காதல் செய்தாலும், அதை ஒரு நாளில் குறிப்பிட்டு, அதைப் பற்றியே உலகம் பேச்சும் நாள் பிப்ரவரி-14 காதலர் தினம். காதலர் தினத்திற்கு காட்டியம் கூற அதற்கு முன்னதாகவே வருவது ’ரோஸ் டே” (Rose Day) ரோஜா தினம். மலர் கொடுத்து மனம் கவர்ந்தவர்களிடம் காதலைச் சொல்லும் நாள் பிப்ரவரி 7 இன்று காதலர்களின் வாழ்வில் முக்கியமான நாள்.

இந்த நாளில் காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பகிர்ந்துகொள்ளும் விதமாக மனம் கவர்ந்தவருக்கு வாழ்த்து அட்டை, பூக்கள், பரிசு பொருட்கள் போன்றவற்றை கொடுத்து மகிழ்கின்றனர். ரோஜாவைப் போல மணக்கும் காதலை, விதவிதமாய் சொல்ல பலருக்கும் பல வழிகள் உள்ளன. ஆனால், உலக அளவில் ஒரு குறியீடாக இன்றைய தினத்தன்று மனதை மயக்கும் ரோஜாவை கொடுப்பது காதலர்களின் கைங்கர்யமாக இருக்கிறது.

மேலும் படிக்க | தளபதி 67 படத்தில் இருந்து விலகிய திரிஷா? லோகேஷ் கனகராஜுடன் சண்டையா? 

 முன்பெல்லாம் காதலர் தினத்தை பிப்ரவரி 14ம் தேதியன்று மட்டும் கொண்டாடிய வாக்கம், தற்போது ஒரு வாரம் முன்னதாகவே காதலர் வாரமாக கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.  அதன்படி பிப்ரவரி-7ம் தேதி முதல் பிப்ரவரி-14ம் தேதி வரை கொண்டாடப்படும் காதலர் வாரத்தில் 7 நாட்களும் எந்தெந்த தினங்கள் கொண்டாடப்படுகின்றன?

பிப்ரவரி 7 - ரோஜா தினம்.
பிப்ரவரி 8 - முன்மொழியும் நாள்.
பிப்ரவரி 9 - சாக்லேட் தினம்.
பிப்ரவரி 10 - டெடி டே.
பிப்ரவரி 11 - வாக்குறுதி நாள்.
பிப்ரவரி 12 - கட்டிப்பிடி நாள்.
பிப்ரவரி 13 - முத்த நாள்.
பிப்ரவரி 14 - காதலர் தினம்.

மேலும் படிக்க | Grammy Awards 2023: இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் 3வது கிராமி விருதை வென்றார்!

பிப்ரவரி 7 - ரோஸ் தினம் (Rose Day)

ரோஜா தினத்தில் காதல் துணைக்கு எப்படி வாழ்த்துக்கள் அனுப்பலாம்? இதற்காக வாழ்த்து அட்டை, விதவிதமான ரோஜாக்கள், பரிசுப்பொருட்கள் என பலரும் பரிந்துரைத்தாலும், உங்கள் மனது என்ன சொல்கிறது என்பதே முக்கியம். என் அருகில் நீ இருந்தால் சொர்க்கமே என்றாலும் சரி, நீ என்னுடன் இருந்தால் தான் நான் இந்த உலகில் எதையும் சாதிக்க முடியும் என்று நெகிழ்ந்தாலும் சரி, இல்லை வெறும் புன்சிரிப்பில் ஒற்றை ரோஜாவோடு கைகுலுக்கினாலும் சரி.... உங்களுக்கு ரோஜா தின வாழ்த்துக்கள்!

மனதால் காதலின் மணத்தை உணர்ந்து, மென்மையாக அன்பை வெளிப்படுத்தி உங்கள் காதலை கண்டின்யூ செய்யலாமே! ரோஜாப்பூவில் உள்ள முட்களைப் போல உங்களுக்கு தடையாக நாங்கள் எதற்கு?

மேலும் படிக்க | ஆராரோ என தாலட்டுப் பாடிய கொஞ்சும் குரலின் முதலாமாண்டு நினைவுக் கதம்பம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News