Simple Sweet Dishes Diwali 2024 : தீபாவளி என்றாலே, முதலில் நினைவிற்கு வருவது பட்டாசுகளும் இனிப்பு தின்பண்டங்களும்தான். அதிரசம், சர்க்கரை பொங்கல், சோமாசு, முறுக்கு என வீட்டில் செய்யும் பலகாரங்கள் மட்டும் ஏராளமாக இருக்கும். இதனை பெரிய வேலையாக கருதும் சிலர் வெளியில் இருந்து கடைகளில் இவற்றை வாங்கிக்கொள்வர். சமைக்க தெரியாதவர்கள் கூட, சிம்பிளான முறையில் சில இனிப்புகளை வீட்டிலயே செய்யலாம். அவை என்னென்ன தெரியுமா?
குலாப் ஜாமூன்:
தேவையான பொருட்கள்:
- 1 கப் கோவா
- கால் கப் மைதா
- கால் டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
- சிறிதளவு உப்பு
- எண்ணெய் தேவையான அளவு
- பால் தேவையான அளவு
- ஒன்றரை கப் சர்க்கரை
- ஒன்றரை கப் தண்ணீர்
- அரை டீஸ்பூன் ஏலக்காய் பொடி
- தேவைப்பட்டால் ரோஸ் வாட்டர்
செய்முறை:
- முதலில் குலாப் ஜாமூனுக்கான சுகர் சிரப்பை தயார் செய்ய வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்க்க வேண்டும், சர்க்கரை கரைந்த பிறகு, ஏலக்காய் தூள் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து அந்த தண்ணீர் பாத ரசம் பதத்தில் வரும் வரை அடுப்பில் வைக்க வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் கோவா, மைதா, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து கலக்க வேண்டும்
- பால் சேர்த்து அந்த மாவு வறுத்தெடுக்கும் பதத்திற்கு வரும் வரை பிசைய வேண்டும்
- இதை சிறிய உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் வருத்தெடுக்க வேண்டும்.
- வறுத்தெடுத்த உருண்டைகள் ஆறியவுடன் அதை சுகர் சிரப்பில் ஊற வைக்க வேண்டும். அந்த சுகர் சிரப்பும் சூடாக இருக்க கூடாது.
கீர்:
தேவையான பொருட்கள்:
- கால் கப் பாஸ்மதி அரிசி
- 1 லிட்டர் கொழுப்புடன் இருக்கும் பால்
- அரை கப் சர்க்கரை
- கால் டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- 2 தேக்கரண்டி நறுக்கிய நட்ஸ்
- தேவைப்பட்டால் குங்கும பொடி எடுத்துக்கொள்ளலாம்
- 1 டேபிள்ஸ்பூன் காய்ந்த திராட்சை
- கொஞ்சமாக உப்பு
எப்படி செய்ய வேண்டும்?
- முதலில் சாதத்தை தயார் செய்ய வேண்டும்
- பாஸ்மதி அரிசியை தண்ணீரில் ஊற வைத்து, 30 நிமிடங்கள் கழித்து தண்ணீரை மட்டும் வடிக்கட்டவும்
- இன்னொரு பக்கம் பாலை ஒரு பாத்திரத்தில் வைத்து அடி பிடிக்காமல் கொதிக்க வைக்க வேண்டும்.
- பால் கொதித்தவுடன் அடுப்பு தீயை சிறிதாக வைத்து அதில் அரிசியை போட்டு கிளர வேண்டும்.
- சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து 5 முதல் 10 நிமிடங்களுக்கு கிளர வேண்டும்.
- இறுதியாக நட்ஸ் மற்றும் குங்குமப்பூ சேர்த்து கீழே இரக்க வேண்டும்.
- இது ஆறியவுடன் கீர் ரெடி
மேலும் படிக்க | வீட்டிலேயே பீட்ஸா செய்வது எப்படி..? சிம்பிள் ரெசிபி இதோ..!
ரவா லட்டு:
தேவையான பொருட்கள்:
- 1 கப் ரவை
- அரை கப் நெய்
- மூன்றரை கப் சர்க்கரை
- அரை டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- நறுக்கிய நட்ஸ் மற்றும் உலர் திராட்சை
செய்முறை:
- நெய்யை ஒரு கடாயில் போட்டு சூடாக்க வேண்டும். பின்பு அதனுடன் ரவையை சேர்த்து கிளர வேண்டும்
- அடுப்பு தீயை சிறிதாக வைத்து ரவையை கொஞ்சம் பிரவுன் ஆகும் வரை வறுக்க வேண்டும்.
- பின்னர் அதை கீழே இறக்கி ஆற விட வேண்டும்.
- இதனுடன் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து, தேவைப்பட்டால் நட்ஸ் சேர்த்து லட்டு பிடிக்க வேண்டும்.
- இந்த லட்டு உருண்டைகளை, ரவை சூடாக இருக்கும் போதே பிடித்தால்தான் அப்படியே நிற்கும்.
மேலும் படிக்க | மகளிருக்கான ட்ரெண்டிங் ஆடைகள்! இந்த தீபாவளிக்கு என்ன ட்ரெஸ் வாங்கலாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ