அரைகுறை ஆடையுடன் வீடியோ அல்லது புகைப்படங்களை வெளியிடுவது கிரிமினல் குற்றத்தில் அடக்கும் என இங்கிலாந்து அரசு அதிரடி சட்டம் பிரப்பித்துள்ளது!
அரைகால் சட்டை, கவர்ச்சியான ஆடைகளை அணிந்து இணையத்தில் வீடியோக்களை வெளியிடுவோர் மீதும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. உலகளவில் சமீப காலமாக நிகழ்ந்து வரும் தனி மனிதர் மீதான பாலியல் குற்றங்களை கருத்தில் கொண்டு இந்த புது சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
இந்த புதிய சட்டம் New law, Voyeurism (Offences) Act 2019-ன் படி அரைகால் சட்டை அணியும் பெண்கள், பெண்களின் அந்தரங்க பாகங்களை பகிரங்கமாக வெளிப்படுத்தும் விதமான வீடியோக்களை பதிவோரும், பரிவோருக்கு உதவி செய்வோரும் கிரிமினல் குற்றவாலிகளாக கருதப்படுவர். எடுக்கப்படும் வீடியோவில் இடம்பெறும் பெண்களின் சம்பந்தம் இல்லாமல் வீடியோ பதியப்படும் பட்சத்தில் வீடியோ எடுக்கும் நபரின் மீதி சட்டம் பாயும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2017-ஆம் ஆண்டு சமூக போராளி ஜின்னா மார்டின் இணையத்தில் அரை நிர்வாண வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களுக்கு எதிராக ‘Care2’ என்னு பிரச்சாரத்தை நடத்தி வந்தார். இணையத்தில் பகிரப்படும் அரைகுறை ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் நாட்டில் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு காரணம் என அவர் தனது பிரச்சாரத்தில் வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது இவரது பிரச்சாரத்திற்கு பயன் அளிக்கும் வகையில் அந்நாட்டில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
--- New law, Voyeurism (Offences) Act 2019 பற்றி சில தகவல்கள் ---
ஒரு தனி மனிதரின் அனுமதி இன்றி அவரது ஆடைகளை குறிவைத்தோ, அவரது அந்தரங்க உறுப்புகளை குறிவைத்தோ புகைப்படம் அல்லது வீடியோ எடுத்தல் கிரிமினல் குற்றத்தில் அடங்கும்.
பாலியல் ரீதியா தூண்டும் வகையில் சைகளை செய்தல், மற்ற வகையில் நடந்துக்கொள்ளுதல், அல்லது நேரடியாக தெரியப்படுத்துதல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர் மீதும் இச்சட்டம் பாயும், என இங்கிலாந்து நீதிவான் சங்கம் தெரிவித்துள்ளது.