மூத்த குடிமக்கள் நிலையான வைப்பு வட்டி விகிதம்: தற்போது மூத்த குடிமக்கள் நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்ய அதிகம் விரும்புகிறார்கள். ஏனெனில் தற்போது பல பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு FD (Fixed Deposit) மீது 8 சதவீதம் வரை வட்டி தருகின்றனர். முதியவர்கள் தங்களுடைய சேமிப்பில் ஒரு பகுதியை நிரந்தர வைப்புத் தொகையில் முதலீடு செய்ய வேண்டும், ஏனெனில் இது பணப்புழக்கத்தை வழங்குகிறது. இது அவசர நிதியை உருவாக்க உதவுகிறது. இருப்பினும், வங்கி FD மீதான வட்டிக்கு வரி விதிக்கப்படும். எனவே இப்போது நாம் 3 வருட FDயில் மூத்த குடிமக்களுக்கு கிடைக்கும் வட்டியைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
யெஸ் பேங்க் (Yes Bank):
யெஸ் வங்கி மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவை மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட நிலையான வைப்புத்தொகைக்கு (Fixed Deposit Interest Rate) 8 சதவீத வட்டியை வழங்குகின்றன. இது தனியார் வங்கிகளில் சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது. எனவே இங்கு நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மூன்று ஆண்டுகளில் ரூ.1.27 லட்சம் கிடைக்கும்.
மேலும் படிக்க | PM Kisan பயனாளிகளுக்கு ஜாக்பாட் செய்தி, விவசாயிகளின் கணக்கில் ரூ.6000
பேங்க் ஆஃப் பரோடா (Bank Of Baroda - BOB):
பேங்க் ஆஃப் பரோடா மூத்த குடிமக்களுக்கு (Senior citizen Fixed Deposit Interest Rate) மூன்று வருட நிலையான வைப்புத்தொகைக்கு 7.75 சதவீத வட்டியை வழங்குகிறது. பொதுத்துறை வங்கிகளில் இவை சிறந்த வட்டி விகிதங்கள் ஆகும்.எனவே இங்கு நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மூன்று ஆண்டுகளில் ரூ.1.26 லட்சம் கிடைக்கும்.
ஆக்சிஸ் வங்கி (Axis Bank):
ஆக்சிஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட நிலையான வைப்புத்தொகைக்கு (FD) 7.60 சதவீத வட்டியை வழங்கப்படுகிறது. இங்கு நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மூன்று ஆண்டுகளில் ரூ.1.25 லட்சம் கிடைக்கும்.
ஹெச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank):
ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட நிலையான வைப்புத்தொகைக்கு (FD) 7.50 சதவீத வட்டியை வழங்குகின்றன. இங்கு நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மூன்று ஆண்டுகளில் ரூ.1.25 லட்சம் கிடைக்கும்.
கனரா வங்கி (Canara Bank):
கனரா வங்கி மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட FDக்கு 7.30 சதவீத வட்டி அளிக்கிறது. ரூ.1 லட்சம் முதலீடு மூன்று ஆண்டுகளில் ரூ.1.24 லட்சம் கிடைக்கும்.
பேங்க் ஆஃப் இந்தியா (Bank Of India -BOI):
பேங்க் ஆஃப் இந்தியா மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட FDக்கு 7.25 சதவீத வட்டியை வழங்குகிறது. ரூ.1 லட்சம் முதலீடு மூன்று ஆண்டுகளில் ரூ.1.24 லட்சம் கிடைக்கும்.
ஃபெடரல் வங்கி (Federal Bank):
ஃபெடரல் வங்கி மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட FDக்கு 7.10 சதவீத வட்டியை வழங்குகிறது. இங்கு நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மூன்று ஆண்டுகளில் ரூ.1.24 லட்சம் கிடைக்கும்.
மேலும் படிக்க | நிரந்தர வைப்பு தொகைக்கு அதிக வட்டி வழங்கும் டாப் வங்கிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ