Tirumala Tirupati: திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயம் உலகப் புகழ் பெற்றது. திருப்பதி பெருமாள் தான் உலகிலேயே மிகவும் பணக்காரக் கடவுள் என்ற பெருமை பெற்றவர். இக்கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருவர்.
இத்தலம் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது. இந்த பகுதியில் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுள்ள திருமலையும், அருள்மிகு பத்மாவதி தாயார் கோயில் கொண்டுள்ள திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கினாலும் பொதுவில் திருப்பதி (TTD) என்றே பக்தர்களால் போற்றப்படுகிறது. திருமலை மேல்திருப்பதி என்றும் மற்றது கீழ் திருப்பதியெனவும் குறிப்பிடப்படுகிறது.
ALSO READ | காவாளம்: திருப்பதி உண்டியல் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்
இத்தகைய பிரசித்தப்பெற்ற இக்கோவிலில் சமீப காலமாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்து இருந்தது.
இந்நிலையில் தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் அடுத்த மாதம் தரிசிப்பதற்காக 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட் நாளை முதல் வெளியிடப்பட உள்ளது. காலை 9:00 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. இதற்கு முன் ஏற்பட்ட அனைத்து தொழில்நுட்ப பிரச்னைகளும் தற்போது சரி செய்யப்பட்டுள்ளதால், இனி பக்தர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மேலும் திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் விரைவு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையையும் தேவஸ்தானம் உயர்த்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ALSO READ | TTD: திருப்பதிக்கு காணிக்கையாக கிடைத்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் நிலை என்ன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR