விசித்திர முறையில் திருமணம் செய்துகொண்ட US காதல் ஜோடி!

வானிலும், கடலிலும் திருமணங்கள் நடத்தப்பட்டு வரும் இக்காலத்தில், காய்கறி சந்தையில் திருமணம் நடத்திய காதல் ஜோடி பற்றி தெரியுமா?

Last Updated : Feb 28, 2018, 12:52 PM IST
விசித்திர முறையில் திருமணம் செய்துகொண்ட US காதல் ஜோடி! title=

வானிலும், கடலிலும் திருமணங்கள் நடத்தப்பட்டு வரும் இக்காலத்தில், காய்கறி சந்தையில் திருமணம் நடத்திய காதல் ஜோடி பற்றி தெரியுமா?

திருமணம் என்பது ஆடம்பரத்தின் அடையாளமாக மாறிவிட்ட இந்த கால கட்டத்தில், செல்வந்தர்கள் பலரும் தங்கள் வசதிகேற்ப கப்பலிலும், விமானத்திலும் திருமணம் செய்துகொள்வதை பார்திருப்போம், ஆனால் இங்கு ஒரு காதல் ஜோடி அமெரிக்காவில் Whole Foods சந்தையில்(Super Market) தங்களது திருமணத்தினை முடித்துள்ளனர்.

வடக்கு கரோலினாவின் சேப்பல் ஹில் பகுதியை சேர்ந்த ரோஸ் ஆன்டர்சன் மற்றும் ஜக்குலின் ட்ரௌட்மென்ட் என்ற காதல் ஜோடி தான் இந்த விந்தையினை செய்துள்ளனர். 

இதுகுறித்து இந்த காதல் ஜோடி தெரிவிக்கையில், தங்களின் திருமணம் தங்களின் உணர்வுகளுடன் இணைந்த ஓர் இடத்தில் தான் நடக்க வேண்டும் என முடிவு செய்தோம், அதனால் இருவரும் இந்த முடிவினை எடுத்ததகாவும் தெரிவித்துள்ளனர்.

திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட தங்களது புகைப்படத்தினை இக்காதல் ஜோடி தங்களது முகப்புத்தக்கத்தில் பதிவேற்றியுள்ளனர்!

Trending News