சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதில் யார் யாருக்கு விலக்கு?

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பதில் மத்திய அரசு முக்கியமான சிலருக்கு விலக்கு அளித்துள்ளது. அந்த பட்டியலை காண்போம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 14, 2019, 06:56 PM IST
சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதில் யார் யாருக்கு விலக்கு? title=

புது டெல்லி: தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதில் பலருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள பட்டியலை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

விலக்கு அளிக்கப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றவர்கள்:- 

குடியரசுத்தலைவர்,
துணைக்குடியரசுத்தலைவர்,
தலைமை நீதிபதி,
உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,
பிரதமர்,
மக்களவை சபாநாயகர்,
மத்திய அமைச்சர்கள்,
மாநில முதல்வர்கள்,
மாநில அமைச்சர்கள்,
மாநில ஆளுநர்கள்,
துணை நிலை ஆளுநர்கள்,
முப்படை தளபதிகள்,
சட்டப்பேரவை சபாநாயகர்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 
ராணுவ கமாண்டர்,
தலைமைச் செயலாளர்கள்,
மத்திய துறைச் செயலாளர்கள்,
மக்களவை & சட்டசபை செயலாளர்கள்,
இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு தலைவர்கள்,
சட்டமன்ற மேலவை & சட்டப்பேரவை உறுப்பினர்கள்,
பரம் வீர் சக்ரா, அசோக் சக்ரா, மஹா வீர் சக்ரா, கீர்தி சக்ரா, வீர் சக்ரா விருது வென்றவர்கள் (அடையாள அட்டை அவசியம்) 
பாரா மிலிட்டரி படைகள்,
மாஜிஸ்திரேட்,
தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம்,
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய பணி வாகனம்,
சடலங்களை எடுத்துச் செல்லும் வாகனம்,
மாற்றுத்திறனாளிகளுக்கான வடிவமைக்கப்பட்ட வாகனம்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது

 

Trending News