Ice Cream Health Benefits Tamil : உடல் மிகவும் சூடாக இருப்பதை உணரும்போது, ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டால் அதனை தணித்துவிடலாம் என எண்ணுகிறார்கள். வாயில் சாப்பிடும்போது இருக்கும் குளிர்ச்சி உடலுக்குள் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறதா? என்றால் இல்லை. மாறாக உடலில் சூட்டை ஐஸ்கிரீம் அதிகரிக்கவே செய்கிறது. ஏன் என்பதற்கான மருத்துவ காரணங்களை பிரபல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐஸ்கிரீம் செரிமானம் ஆகும்போது அதில் இருக்கும் பால் கொழுப்பை செரிக்க அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. ஏனென்றால் ஐஸ்கிரீமில் அதிக பால் கொழுப்புகளே இருக்கும். கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களை ஒப்பிடும்போது அவை கடினமானவை என்பதால் பால் கொழுப்பை செரிக்க அதிக ஆற்றலை உடல் எடுத்துக் கொள்ளும். இது இயல்பாகவே உடலின் சூட்டை மேலும் அதிகப்படுத்த முக்கிய காரணியாக அமைந்துவிடுகிறது. கூடுதலாக ஐஸ்கிரீமில் சர்க்கரையும் இருக்கிறது. செரிமானத்தின்போது அவை உடைக்கப்படும்போது வெப்பம் வெளிப்படுகிறது.
மேலும் படிக்க | மருதாணியை இந்த முறையில் முடிக்கு தடவினால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்!
ஐஸ்கிரீம் சாப்பிடும்போது வாய் மற்றும் தொண்டையில் இருக்கும் உணர்ச்சி நரம்புகள் குளிர்ச்சியாக இருக்கும் சமிக்கைகளை மூளைக்கு அனுப்புகின்றன. உடனே மூளை அதனை சமாளிக்க தேவையான ஆற்றலை உற்பத்தி செய்ய தொடங்குவதற்கான பணிகளை முடுக்கிவிடும்போது, உடல் வெப்பநிலை தூண்டப்படுகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட பிறகு அதற்கு எதிர்வினையாக உருவாகும் உடல் வெப்பம் என்பதை ஒப்பீட்டளவில் மிக குறுகிய காலம் தான். இவை ஒட்டுமொத்த உடலின் வெப்பநிலையை உயர்த்தாது, செரிமான அமைப்பில் மட்டும் கூடுதலான வெப்பம் உருவாகும்.
சரி, உடலை குளிர்விக்க என்ன தான் சாப்பிடுவது என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. அதாவது உடல் சூடாக இருப்பதை உணரும்போது, உடனடியாக என்ன சாப்பிடலாம் என்று கேட்பவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பது என்னவென்றால், மோர், எலுமிச்சை ஜூஸ், தேங்காய் தண்ணீர் ஆகியவற்றை சாப்பிடலாம் என்கின்றனர். செயற்கை பானங்களை அறவே தவிர்த்துவிட வேண்டும் என கூறும் மருத்துவர்கள் அதனால் உடலுக்கு கெடுதலே தவிர நன்மைகள் ஏதும் இல்லை என்றும் அடிக்கோடிட்டு சொல்கின்றனர்.
ஆனால், இப்போதுவரை பெரும்பாலானோர் உடலை குளிர்விக்க செயற்கை பானங்களையே உடனடியாக வாங்கி குடிக்கின்றனர். இது ஆபத்து என்பதை அவர்கள் அறிந்திராமல் செய்யும் தவறு என்றாலும், அவரவர் உடலுக்கு எதனால் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை அறிந்து வைத்துக் கொள்வது அவசியம். அந்தவகையில் இவ்வளவு நாள் ஐஸ்கிரீம் உடலை குளிர்ச்சியாக்கும் என நினைத்து சாபிட்டவர்கள் இனி வரும் நாட்களில் கவனமாக இருப்பது நல்லது.
மேலும் படிக்க | ஒரு ஒலிம்பிக் தங்க பதக்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ