கிரகப்பலன்கள் மற்றும் ஒரு சில ஆளுமை பண்புகளின் படி, ஒரு சில ராசிக்காரர்களுக்கு சில ராசியுடையோருடன் செட் ஆகாமல் போய் விடும். இவர்களுக்கும் காதல் வளர்ந்தாலும் அவ்வப்போது தவறான புரிதலால் சண்டையிடுவர். இருவருக்குள்ளும் சரியான புரிதல்களே இருக்காது. அப்படி இருக்கும் 5 செட் ராசிக்காரர்கள் யார் யார் என்பதை இங்கே பார்ப்போம்.
1. மேஷம் மற்றும் கடகம்:
மன தைரியமும் திடமான உறுதியும் மிக்கவர்கள், மேஷ ராசிக்காரர்கள். இவர்கள், இயல்பாகவே தனித்து செயல்பட கூடியவர்கள். இவர்களுக்கும் கடக ராசிக்காரர்களுக்கும் காதல் வந்தாலும் அது செட்டே ஆகாதாம். கடக ராசிக்காரர்களுக்கு உணர்வு ரீதியாக உதவிகள் தேவைப்படும். இதை மேஷ ராசி உடையோரால் பூர்த்தி செய்ய முடியாது. இதனால் இவர்களுக்கும் அவ்வப்போது சண்டைகளும் பூசல்களும் வரலாம். இருவரும் ஒரு விதத்தை அனுகும் விதமே வித்தியாசமாக இருப்பதால் இந்த பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
2. ரிஷபம் மற்றும் கும்பம்:
ரிஷப ராசி உடையோர் கொஞ்சம் பழமை வாதிகளாக இருப்பார்களாம். இவர்கள், எது செய்தாலும் முறைப்படியும் கலாச்சார படியும் செய்ய வேண்டும் என யோசிப்பார்களாம். ஆனால், கும்ப ராசிக்காரர்கள் அப்படி கிடையாது. இவர்களுக்கு அதிக அளவில் சுதந்திரம் தேவைப்படும். ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் பார்ட்னரை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என நினைப்பார்கள், முறைப்படி நடந்து கொள்ள வேண்டும் என வற்புறுத்துவார்கள். இவர்களுக்கு கும்ப ராசி உடையோர் பார்ட்னராக வந்து விட்டால், கதை க்ளோஸ்.
மேலும் படிக்க | ‘இந்த’ 5 ராசிக்காரர்களுக்கு காதல் செய்யவே தெரியாது..! யார் அந்த முரட்டு சிங்கிள்ஸ்?
3. மிதுனம் மற்றும் கன்னி:
ஜெமினியின் அனுசரிப்பு மற்றும் நேசமான இயல்பு கன்னியின் நடைமுறை மற்றும் பகுப்பாய்வு மனநிலையுடன் மோதிக்கொள்ளும். பல்வேறு அறிவுசார் தூண்டுதலுக்கான ஜெமினியின் நிலையான தேவை கன்னிக்கு அதிகமாக ஏற்படும். அவர்களின் பார்ட்னருடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவிப்பர். கன்னி ராசிக்காரர்கள் எதர்கெடுத்தாலும் விமர்சனம் செய்வர். கன்னியின் இந்த விமர்சன குணம் ஜெமினியின் உற்சாகத்தையும் தன்னிச்சையையும் குறைக்கும். இது அவர்களுக்குள் உள்ள காதல் முறியவும் வழிவகுக்கும்.
4. சிம்மம் மற்றும் விருச்சிகம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கும் சுத்தமாக ஒத்துப்போகாதாம். சிம்ம ராசி உடையோர் அனைவரின் கவனமும் தன் மீது இருக்க வேண்டும் என நினைப்பர். இதற்காக அவர்கள் பிறரை கவர என்ன வேண்டுமானாலும் செய்வார்களாம். இது, விருச்சிக ராசி உடையோரின் தனிமையை கெடுத்து விடும். அதிகம் பேரிடம் பேசி பழகும் குணமுடைய சிம்ம ராசிக்காரர்களுக்கும் சிலரிடம் மட்டும் பேசி உண்மையாக நட்பு பாராட்டும் விருச்சிக ராசிக்காரர்களுக்கும் பல விஷயங்களில் ஒற்றுமை இருக்காதாம். இது பின்னாளில் பல பிரச்சனைகளில் கொண்டு போய் விட்டுவிடும்.
5. துலாம் மற்றும் மகரம்:
ஃபேண்டசி உலகில் வாழும் துலாம் ராசிக்காரர்களுக்கும் நிதர்சனத்தில் வாழும் மகர ராசிக்காரர்களுக்கும் சுத்தமாக செட் ஆகாதாம். இருவரும் வெவ்வேறு லட்சிய பாதையில் பயணிப்பர். சமயங்களில் இதனால் கூட இருவருக்குள்ளும் சண்டை ஏற்படலாம். துலாம் ராசிக்காரர்கள் அனைவரிடமும் நட்பு பாராட்ட வேண்டும், நிறைய காதலிக்க வேண்டும் என்று விரும்பினால், மகர ராசிக்க்காரர்கள் தங்கள் வேலையையே முதன்மை படுத்துவராம். இதனால் பல நேரங்களில் இவர்களுக்குள் சண்டை ஏற்படலாம்.
இந்த லிஸ்டில் உள்ள சில ராசிக்காரர்கள் இதிலிருந்து வேறுபட்டும் இருப்பர். பெரும்பாலானோருக்கு இந்த வகையான காதல் அல்லது திருமண வாழ்க்கை அமையலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ