வெளியானது ஆண்ட்ரியாவின் 'கா' படத்தின் பர்ஸ்ட் லுக்!

ஆண்டரியா நடிப்பில் உருவாகியுள்ள கா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! 

Last Updated : Apr 29, 2018, 05:12 PM IST
வெளியானது ஆண்ட்ரியாவின் 'கா' படத்தின் பர்ஸ்ட் லுக்!  title=

தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடிகையாகவும் வளம் வந்தவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் நடிப்புடன் பாடகியாகவும் வளம் வருகிறார். இவருடைய படங்களான விஸ்வரூபம்-2 மற்றும் வாடா சென்னை திரைப்படங்கள் வெளியாக உள்ளது. 

தற்போது, அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி பிசியாகவே இருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் வெயில் தாக்கத்தை தாங்க முடியாமல் நீச்சல் குளத்தில் இருந்தபடி ஒரு புகை படத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அது அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இவர் தற்போது ஹீரோயின் கதாபதிரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டும் கவனம் செலுத்தியுள்ளார். தரமணி படத்திற்கு இவருக்கு தேசிய விருது கூட கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தனர். அந்த அளவிற்கு அவர் சிறப்பாக நடித்து வருகின்றார். இந்நிலையில் ஆண்டரியா அடுத்து கா என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படமாம், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளிவந்துள்ளது. இது இணையத்தில் வைரளாகி வருகிறது....!

 

Trending News