ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் டிக்கெட் வாங்கிய பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சரியான முன்னேற்பாடுகள் செய்யப்படாததால் நிகழ்ச்சியை காண வந்த ரசிகர்கள் பலர் பல இன்னல்களுக்கு ஆளானார்கள். 10 அயிரம் ரூபாய் டிக்கெட் எடுத்தும் நிகழ்ச்சியை காண முடியாமல் திரும்பிச் சென்ற அவலமும் நடந்தது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க நெட்டிசன்கள் வழக்கம் போல மீம்ஸ்களால் தெறிக்கவிட்டு வருகின்றனர். அந்த வகையில், மீம் ஒன்றில் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியை அடுத்து மன்னிப்பாயா என்ற பெயரில் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியை நடத்துவாரா என கலாய்த்து மீம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
அடுத்ததாக இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளால் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனை வைத்து தலையில் கட்டுடன் வரும் ஒருவரிடம், ஜவான் படத்துக்கு சென்று வருகிறீர்களா என கேட்க, அவர் மறக்குமா நெஞ்சம் பார்க்க போய்ட்டு வந்தேன் என சொல்வது போல ஒரு மீமும் பலரையும் கவர்ந்துள்ளது. ஜவான் படத்தில் ஷாருக்கின் லுக்கில் ரசிகர்கள் பலர் படத்துக்கு சென்றது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியின் உள்ளே ஏ.ஆர்.ரஹ்மான் அக்கினி சிறகே எழுந்து வா என்று பாடுவது போலவும், ஆனால் மைதானத்தின் வாசலிலேயே ரசிகர்கள் பட்ட அவஸ்தையை சொல்வது போலவும் ஒரு மீம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை ஏசிடிசி என்ற நிறுவனம் தான் ஒருங்கிணைத்து செய்தது. அதை வைத்து ஏ.ஆர்.ரஹ்மான், அந்த நிறுவனத்திடம் உன்னால் என்ன செய்ய முடியுமோ அதை செஞ்சுட்ட என சொல்வது போல வடிவேலு காமெடியை வைத்து மீம் ஒன்று வெளியாகியுள்ளது. வெளியில இவ்வளவு கலவரம் நடக்குறப்போ, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளே எல்லாம் மாறும் எல்லாம் மாறும் பாடுனார் பாருங்க.. லைப்ல மறக்கமாட்டேன் என ஒருவர் எழுதிய பதிவும் இப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி குறித்து விசாரிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு; இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்திடம் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க தாம்பரம் காவல் ஆணையருக்கு டிஜிபி உத்தரவு.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ